66வது குடியரசு தினவிழா இன்று சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டணம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 66வது குடியரசு தினம் ஜனாப் ஹாஜி வாவு K.S. முகம்மது நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மாணவர் அல்ஹாபிழ் P.M. சதக்கத்துல்லா சஃபுஹ் கிராஅத்துடன் விழா தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியர் K. சாகுல் ஹமீது M.Com, M.Ed. அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
ஜனாப் ஹாஜி வாவு S.அப்துல் கஃப்பார், ஜனாப் M.K. முகிய்யதீன் தம்பி (துரை), ஜனாப் ஹாஜி K.M.S. சதக் தம்பி M.Sc., ஜனாப் ஹாஜி A.H. நெய்னா சாகிப், ஜனாப் ஹாஜி M.A. அப்துல்ஹக், ஜனாப் ஹாஜி V.N.S. முகம்மது முகைதீன், ஜனாப் ஹாஜி N.M.H. முகம்மது முகைதீன், ஜனாப் ஹாஜி M.T. ஜாபர் சாதிக், ஜனாப் ஹாஜி V.I. ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
விழாவில் ஜனாப் ஹாஜி W.M.M. மஸ்னவி B.Com (பள்ளி தாளாளர்) அவர்கள் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தார்கள்.
சென்ற ஆண்டு பள்ளி, அரசுத்தேர்வு மற்றும் மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் பரிசு மற்றும் ரொக்க தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் ஜனாப் ப. செய்யது அப்துல் காதர் M.Sc,M.Ed., M.Phil அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக பள்ளி ஆசிரியர் ஜனாப் ஆ.மு. செரீப் M.A.,M.Ed அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்:
ஆசிரியர் அ. பீர் முகம்மது உசேன் M.SC., B.Ed., DCS
|