காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு, DCW ஆலையின் நிர்வாக உதவித் தலைவர் பரிசு வழங்கியுள்ளார். இதுகுறித்து, அந்த ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரை வேல் அனுப்பியுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டணம் நகராட்சி 1வது வார்டுக்குட்பட்ட அருணாசலபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 50-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கடந்த ஆறு நாட்களாக மாணவ, மாணவிகள் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விழாவின் இறுதி நாளான நேற்று (19.01.2015) திருவள்ளுவர் மன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாpசளிப்பு விழா இரவு நடைபெற்றது. விழாவிற்கு சேகர் தலைமை வகித்தார். துரைராஜ், ஆதவன், முத்துக்கிருஷ்ணன், மாதவன், ஜெபராஜ், ஆனந்த், கமல்ராஜ், மகராஜன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிசிடபிள்யூ நிறுவனத்தின் நிர்வாக உதவி தலைவர் டாக்டர் எம்.சி.மேகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் திருவள்ளுவர் மன்ற தலைவர் சா.செல்வக்குமார், செயலாளர் பா.ரகுநாதன், பொருளாளர் கொ.பிரம்மானந்தன், ஊர் நல கமிட்டி தலைவர் ராஜகோபால், செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் முருகன், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்புதுறை துணை மேலாளர் சு.சித்திரைவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மண் வாசனை கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அருணாசலபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் திரு உருவ சிலைக்கு டிசிடபிள்யூ நிறுவன நிர்வாக உதவி தலைவர் டாக்டர் எம்.சி.மேகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |