காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், ‘வாசிப்பை நேசிப்போம்’ எனும் தலைப்பில், சிறப்பு நிகழ்ச்சி இன்று 19.00 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இலங்கை ‘மீள் பார்வை’ மாதமிருமுறை இதழின் துணையாசிரியர் மவ்லவீ இன்ஸாஃப் ஸலாஹுத்தீன் சிறப்பழைப்பாளராகப் பங்கேற்று, “வாசிப்பை நேசிப்போம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
முன்னதாக, பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ - சிறப்பழைப்பாளர் குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் அறிமுகவுரையாற்றினார். பள்ளியின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிருக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |