காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் பைத்துல்மால் அலுவலகத்தில் டிசம்பர் மாதம் நடைபெற்ற உதவி வழங்கும் கூட்டத்தில், நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவி கேட்டு வந்துள்ள மனுக்களை பரிசீலித்து, அவர்களை நேரில் அழைத்து விசாரித்து, அவர்களில் தகுதியான நபர்களை தெரிவு செய்தனர்.
அதன்படி -
கடனாக 14 பயனாளிகளுக்கும்,
ஜகாத் நிதியிலிருந்து 7 பயனாளிகளுக்கும்
உதவித்தொகை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நிர்வாகிகள் வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர், டூட்டி எம்.எஸ்.எல். சுஹரவர்த்தி, வி.எம்.ஐ. செய்யது முஹம்மது புகாரி, எஸ்.எம்.அஹ்மத் ஸுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|