முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான், கடந்த அக்டோபர் மாதம் - காயல்பட்டினம் தென் பாக கிராமத்தில் உள்ள தனது சர்வே எண் 278 இடத்தின் 5.5 ஏக்கர் நிலத்தை, காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியிருந்தார். அதில் - 4 ஏக்கர் நிலம் குப்பைகள் கொட்டவும் (கம்போஸ்ட் யார்டு) மற்றும் 1.5 ஏக்கர் நிலம் பொது பாதைக்கு எனவும் வழங்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் - கம்போஸ்ட் யார்டு கொண்டு வரவும், பயோ காஸ் திட்டம் கொண்டு வரவும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே - டிசம்பர் 8 (2014) அன்று காயல்பட்டினம் நகராட்சி, MUNICIPAL SOLID WASTES (MANAGEMENT & HANDLING) RULES 2000 விதிமுறைகள்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், சர்வே எண் 278(1) இல் கம்போஸ்ட் யார்டு கொண்டு வர, விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தது.
அந்த விண்ணப்பம் அடிப்படையில், ஜனவரி 7 அன்று - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கள ஆய்வு செய்தனர். அதன் பிறகு - மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், காயல்பட்டினம் நகராட்சிக்கு தனது முடிவினை தெரிவித்து,
கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 12, 2015 தேதிய கடிதத்தில் - அப்பகுதிக்கான புதிய CRZ வரைப்படம்படி, சர்வே எண் 278(1) நீர் தேங்கும் இடம் என்றும், அதனால் - நகராட்சியின் விண்ணப்பம் குறித்து
மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க இயலாது என்றும், விண்ணப்பம் (நகராட்சிக்கு) திருப்பி அனுப்பப்படுகிறது என்றும், இதற்கான மாற்று
இடத்தை பரிசீலனை செய்யும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நகர்மன்றத் தலைவரின் இந்த இடம் - நிராகரிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த இடம் குறித்த பல கேள்விகளுக்கு மத்தியிலும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்ககத்தின் செயற்பொறியாளர் கனகராஜ், சர்ச்சைக்குரிய வகையில் - சர்வே எண் 278 யை, பயோ காஸ் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருந்தார். 4 நாட்களில் தயாரிக்கப்பட்ட அவரின் இரு பக்க அறிக்கை, தொழில்நுட்ப தொனியில் இல்லாது, வருவாய் துறை அதிகாரியின் தொனியில் அமைந்திருந்தது.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் காந்திராஜ், டிசம்பர் 8 அன்று நகராட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மாசு கட்டுப்பாட்டு
வாரியத்தில் நிலுவையில் இருக்கும் நிலையிலும், டிசம்பர் மாதம் இறுதியில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - அவ்விடத்தில் சரல் சாலைகள் அமைக்க அனுமதி பெற முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|