முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் - அக்டோபர் 9, 2014 அன்று, காயல்பட்டினம் தென் பாக கிராம பகுதியில்
உள்ள தனது சர்வே எண் 278 நிலத்தில் (மொத்த பரப்பளவு: 26 ஏக்கர்), 5.5 ஏக்கர் நிலத்தை - இரு பத்திரங்கள் வாயிலாக, காயல்பட்டினம்
நகராட்சிக்கு வழங்கினார்.
அதில் 4 ஏக்கர் பரப்பளவிலான நிலம், குப்பைகள் கொட்டவும், அது சார்ந்த விஷயங்களுக்கும் என வழங்கப்பட்டது. மீதி 1.5 ஏக்கர் நிலம் - பொது
சாலை அமைக்கவும் என தனி பத்திரம் மூலம் வழங்கப்பட்டது.
பொதுப்பாதைக்கு என வழங்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலம் குறித்த பத்திரம் நகல்
ஒரு பெரிய நிலத்தின் பாகங்கள் வேறொருவருக்கு உரிமை மாறும்போது, அந்த நிலத்தில் உட்பிரிவுகள் (SUB-DIVISION) உருவாக்கப்படுவது வழக்கம்.
திருச்செந்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் - சர்வே எண் 278இன் FMB என்ற நில வரைப்படத்தை காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் கோரியிருந்தது. அந்த அலுவலகத்தில் இருந்து இந்த வாரம் - சர்வே எண் 278க்கான FMB வரைப்படம் கிடைக்கப்பெற்றது.
அக்டோபர் மாதமே பத்திரப்பதிவுகள் முடிவுற்றிருந்தாலும், தற்போது வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட வரைப்படம், உட்பிரிவுகள்
உருவாக்கப்படாத, வரைப்படமாகவே இருந்தது.
இது குறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்ததில், 4 ஏக்கர் நிலத்திற்கான உட்பிரிவு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கான உட்பிரிவு எண் (1 B)
வழங்கப்பட்டு விட்டதாகவும், சாலைக்கான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவினில் சாலை அமைக்க முடியாது என்பதால் - அதற்கான உட்பிரிவு
உருவாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மாற்று வழிகள் உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் மேலும்
தெரிவிக்கின்றன.
காயல்பட்டணம்.காம் முன்னர் வெளியிட்ட செய்தியில், சாலை வழங்கப்பட்டுள்ள பகுதி CRZ - 1
எல்லைக்குள் அமைவதாக தெரிவித்திருந்தது. இருப்பினும் அந்த கோணத்தில் - வட்டாச்சியர் அலுவலக ஆட்சேபனைகள் தற்போது எழுந்துள்ளதாக
தெரியவில்லை.
சர்வே எண் 278 இல் உள்ள நிலத்தின் பெருவாரியான பகுதிகள் CRZ - 1 வகையிலும், சில பகுதிகள் CRZ - 3 வகையிலும் வருகிறது என 2013ம்
ஆண்டு இறுதியில், நவம்பர் 4, 2013 தேதியிட்ட கடிதம் மூலமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு
தெரிவித்துள்ளது.
காயல்பட்டினம் நகராட்சிக்கு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய, நவம்பர் 4, 2013 தேதியிட்ட
கடிதம்
நவம்பர் 4, 2013 அன்றே காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட, சர்வே எண் 278 இடம், CRZ - 1 மற்றும் CRZ - 3
வகையை சார்ந்தது என தெரிவிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியப் பட்டியல்
நவம்பர் 4, 2013 அன்றே காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட, சர்வே எண் 278 இடம், CRZ - 1 மற்றும் CRZ - 3
வகையை சார்ந்தது என தெரிவிக்கும் CZMP படம்
ஓர் ஆண்டிற்கும் முன்பே, இந்த (278) சர்வே எண் உட்பட காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் உள்ள அனைத்து நிலங்கள் குறித்த CRZ விபரங்கள், காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்ட பிறகும், அதனை பொருட்படுத்தாமல், திருநெல்வேலி மண்டல செயற்பொறியாளர் கனகராஜ்
இந்த இடத்தினை அரசு திட்டங்களுக்கு பரிந்துரைத்திருப்பது வியப்பாக உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய விபரங்கள், நகராட்சி அலுவலர்களால் - மண்டல செயற்பொறியாளரிடம் வழங்கப்படாமல் மறைக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
|