தமிழக அரசின் சேவைகள், உத்தரவுகள், உரிமங்கள் போன்றவை எளிதாக / விரைவாக பொது மக்களை சென்றடைய எவ்வாறு மாற்றங்கள் கொண்டு வரலாம் என ஆலோசனைகளை, பொது மக்களிடம் இருந்தும், அரசு சாரா அமைப்புகளிடமிருந்தும் - தமிழக அரசு கோரியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், ஆலோசனைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல், கீழ்க்காணும் தலைப்புகளில் (முடிந்த மட்டும் வரைபடம் மூலம்) - simplifyprocedureintn@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, அனுப்பும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
(1) தேவைப்படும் சேவை (சான்றிதழ் வழங்குதல், கட்டணம் செலுத்துதல் போன்றவை)
(2) எத்துறை அலுவலகத்தின் நடைமுறையை சார்ந்தது
(3) தற்போதுள்ள நடைமுறை
(4) தோராயமான தலைப்பு / நடைமுறையின் பெயர்
(5) தேவைப்படும் மாற்றங்கள்
(6) மாற்றத்தின் விளக்கம்
ஆலோசனைகள் பிப்ரவரி 16, 2015 க்குள் வழங்கப்படவேண்டும் என்றும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
தமிழன் முத்து இஸ்மாயில்
|