சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 84-வது செயற்குழு கூட்டம்
சென்ற 09/01/2015 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா , ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் சிறப்பாக நடந்தேறியது.
சகோ.P.A.J.ஷெய்கு அப்துல்லாஹ் தலைமையில் சகோ. அல்ஹாபிஃழ் M.H. முஹம்மது அலி இறைமறை ஓத, சகோ.M.M.S.ஷெய்கு அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
சென்ற கூட்டத்தின் தீர்மானம் மற்றும் அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகள்,
கல்வி மற்றும் மருத்துவ உதவி விபரங்கள், மன்றத்தின் 33 வது பொதுக்குழு மற்றும்
மக்காவில் வரும் 23-01 -15 வெள்ளி மக்ரிபுக்குப்பின் நடைபெறவிருக்கும்
மக்காவாழ் காயலர்களின் சந்திப்பு கூட்டம் பற்றியும் மேலும் சில தகவல்களையும் தந்தமர்ந்தார் மன்றச்செயலர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான்.
"வரும் கல்வியாண்டில் நற்மதிப்பெண் பெற்ற நம் சமுதாய மாணவ மாணவிகள்
சென்னை ,தானிஷ் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்புகள் காத்துள்ளதென்றும், அதை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும்,
இது விபரம் இக்ரா நிர்வாகி மூலம் அறிந்து கொண்டதையும் மேலும் நம் நகர் K.M.T.மருத்துவமனையில் நிரந்தர அவசர மருத்துவர் நியமிப்பது குறித்து
அதன் நிர்வாகிகளுக்கு நாம் அறியத்தரப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செயலர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை:
மன்றத்தின் வரவு, செலவு, இருப்பு மற்றும் பயனாளிகளுக்கான உதவிகள் போன்ற நிதிநிலை விபரங்களை கொடுத்தார் சகோ.M.S.L.முஹம்மது ஆதம்.
சிறப்பு விருந்தினர்:
தாயகத்திலிருந்து புனித "உம்ரா" கடமையை நிறைவேற்ற வருகை தந்திருந்த
சகோ. அரிஸ்டோ M.N.முஹம்மது சுலைமான் (48) நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக
கலந்து மன்றப்பணிகளை பாராட்டியதோடு நல்ல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
மருத்துவ உதவிகள்:
ஷிபா மருத்துவ கூட்டமைப்பு மூலமாக கிடைக்கப்பெற்ற மருத்துவ மனுக்கள் முறையே வாசிக்கப்பட்டு கண் அறுவை சிகிச்சை,அப்பன்டிஸ் ,ஹெர்னியா மற்றும் தொடர் சிகிச்சை என மொத்தம் 6 -பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன நோயுற்றோர் நலம் பெறவும் பிரார்த்திக்கப்பட்டது.
நகரில் சமீபத்தில் பெய்த கடும் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவும் நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட "மழை வெள்ள நிவாரணக்குழு" விடமிருந்து
வந்திருந்த கடிதம் வாசிக்கப்பட்டு உரிய நேரத்தில் களமிறங்கி சிறப்பானதொரு
நற்பணியை நிறைவாக செய்த அவர்களின் தன்னார்வ சேவை வெகுவாக பாராட்டப்பட்டது.
தீர்மானம்:
1, தம்மாம் காயல் நல மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று நம் நகர் K.M.T.மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக நிரந்தர அவசரகால சிகிச்சை மருத்துவர் மற்றும் பணியாளர்களை நியமிக்க K.M.T. மருத்துவமனை நிர்வாகத்தை இம்மன்றம் மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
2, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் பிப்ரவரி 13-வெள்ளியன்று மன்றத்தின் 13-வது ஆண்டு துவக்கம், 7-வது அமர்விற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்தல்
மற்றும் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கும் மன்றத்தின் 33-வது பொதுக்குழுவிற்கான உணவு,வாகனம் ,வரவேற்பு ,நிதி நிர்வாகம் மற்றும் ஆண்கள்,மகளிர்,குழந்தைகள் விளையாட்டுக்கென ஏற்பாட்டுக்குழுக்கள் முறையே அமைக்கப்பட்டது.
சகோ.O.A.C.கிஸார் சலாஹுதீன் நன்றி நவில சகோ.M.S.L.முஹம்மது ஆதம் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். கூட்டத்திற்கான மற்றும் இரவு உணவுக்கான அனுசரணையை சகோ.A.M.செய்யிது அஹ்மது நல்லமுறையில் செய்து இருந்தார்.
தகவல்:
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஅய்ப்
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
20-01-2015.
|