ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், மர்ஹூம் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நலத்திட்ட உதவிகளுக்காக நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் 27ஆவது செயற்குழு கூட்டம் 09 - 01 - 2015 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப். L.T.இப்ராஹீம் அவர்களின் தலைமையில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் மக்பூல் அஹமது மற்றும் பொறுளாளர் ஜனாப். ஹுசைன் நூர்தீன் ஆகியோர்களின் இல்லத்தில் வைத்து கூடியது. மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
வெள்ள நிவாரண நிதிஒதுக்கீடு:
சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது ஊர் மக்களின் துயரங்களை அறிந்து நமது மன்றத்தால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள உதவிகளுடன் மேலும் வீடுகளை இழந்த குடும்பத்திற்கு SHIFA அமைப்புடன் இயங்கும் வெள்ள நிவாரண குழுவால் ஆய்வு செய்து ஒரு வீடு கட்ட ரூபாய் 60,000 என்று தீர்மானிக்கப்பட்டதை அறிந்து நமது மன்றத்தின் ஓர் பங்காக ஒரு வீட்டின் பொறுப்பை எடுத்து, அதன் தொகைக்கு மன்றம் ஒப்புதல் அளித்தது.
மருத்துவ உதவி மற்றும் SHIFA அமைப்புடன் நடந்த கலந்துரையாடல்:
SHIFA அமைப்பின் கலந்துரையாடல், நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் விரிவாக நமது மன்ற மருத்துவ குழு உறுப்பினர் டாக்டர் S. செய்யித் அஹ்மது மூலம் விவரிக்கப்பட்டு தேவையான நிதி உதவிக்கு மன்றம் ஒப்புதல் அளித்தது.
மர்கூம். அல்ஹாஜ் B.S. அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு இரங்கல்:
இந்தியாவின் சிறந்த கல்வி தந்தை பொது சேவகர், சமுதாய அறங்காவலர், தொழில் அதிபர் மரியாதைக்குரிய கீழக்கரை மர்கூம். அல்ஹாஜ் B.S. அப்துல் ரஹ்மான் அவர்களின் மரண செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்கள் செய்த அற்புதமான அனைத்து பணிகளையும் அல்லாஹ் கபூல் செய்து அவர்களுக்கு நன்மைகளாக மாற்றி கொடுப்பானாக. அவர்களை பிரிந்து தவிர்க்கும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவருக்கும் அல்லாஹ் சபூர் எனும் மேலான பொறுமையை கொடுப்பானாக. அவர்களின் மறு உலக வாழ்க்கையை வெற்றியாக்கி வைப்பானாக என பிரார்த்தித்து எங்கள் சங்கத்தின் அங்கத்தினர் அனைவரும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சலாம் எனும் சாந்தியை சமர்பிக்கின்றோம்.
அடுத்த செயற்குழு கூட்டம்இன்ஷாஅல்லாஹ் 13 – 02 - 2015ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்கள் அறிவிக்க ஹாஃபிழ் நஹ்வி. S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்:
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக,
M.E. முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(செய்தி & ஊடகத்துறை பொறுப்பாளர்)
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (26ஆவது) செயற்குழுக் கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 20:20 / 20.01.2015] |