காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் அஹ்மத் அலீ, நேற்று (ஜனவரி 16 வெள்ளிக்கிழமை) 21.00 மணியளவில், அவரது சொந்த ஊரான திருநெல்வேலி - பேட்டையில் காலமானார். அவருக்கு வயது 47.
அன்னாரின் ஜனாஸா இன்று 13.00 மணியளவில் பேட்டையில் நடைபெறவுள்ளது. நல்லடக்கத்தில் கலந்துகொள்வதற்காக, எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தனி வாகனத்தில் செல்கின்றனர்.
ஆசிரியர் அஹ்மத் அலீ, பள்ளியின் - பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபாவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. Re:... posted byH.I.Rugnudeen Buhary (Kayalpatnam )[17 January 2015] IP: 49.*.*.* India | Comment Reference Number: 38925
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்...
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
2. Re:... posted byAbu Huraira (Abu Dhabi)[17 January 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38928
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
இவரிடம் 1992 & 1993 ஆண்டு அறிவியல் பாடம் படித்தேன். மிகவும் அன்பான, பாசமான ஆசிரியர். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை கொடுப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாகஆமீன்.
M T ARSHADH RAYAAN 12த் st & S.A.M.MOHIDEEN THAMBI
6. Re:... சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்! posted byM.S.ABDUL AZEEZ (Guangzhou.)[17 January 2015] IP: 121.*.*.* China | Comment Reference Number: 38932
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
10. Re:... posted byஎஸ்.ஏ.கே.செய்யது மீரான் (ஜித்தா.)[17 January 2015] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38941
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின்
நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து
மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து
நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும்
எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இவர்களது புகைப்படம் பிரசுரித்தால் நல்லது.
அன்பின் எஸ்.எம்.அப்துல் ரஸ்ஸாக் .9-ம் வகுப்பு டி மாணவன்
மற்றும் தந்தை எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.
12. உண்மையான நல்லடியார்களாக வாழ்ந்து அவன் திருப்பொருத்தத்தில் மரணிக்கும் நசீபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக...!!! posted bySK Shameemul Islam (Chennai)[18 January 2015] IP: 111.*.*.* India | Comment Reference Number: 38962
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவ்வளவு சிறிய வயதில் இறந்து விட்டார். மரணம் என்பது வயோதிகர்களுக்கு மட்டுந்தான் என்றில்லை. அனைவருக்கும் அது உண்டு என்பதை இவரது இழப்பு உணர்த்துகிறது.
எனவே நற்செயல்களை காலம் கடத்தாது செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கையை அல்லாஹ் நமக்கு இதன் மூலம் அறியத்தருகிறான்.
ஆசிரியராக இருந்து ஹலாலான சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி எதிர்கால தலைவர்களை நல்வழிப்படுத்திய இந்த பெருமகனாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்ந்த சுவன்ச்சொலையை வழங்குவனாக.
அவனது உண்மையான நல்லடியார்களாக வாழ்ந்து அவன் திருப்பொருத்தத்தில் மரணிக்கும் நசீபை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார்கள், எண்களின் பாசத்திற்குரிய ஆசிரியர் முஹம்மது ஹனீபா ஆகியோருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன்.
13. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede millath nagar)[18 January 2015] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38966
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
14. Re:...assalamu alaikum. posted byS.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.)[18 January 2015] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38967
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக! ஆமீன்!!!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக! ஆமீன்!!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!!
விஸ்டம் பள்ளியின் முதல்வர். ஹாஜி. ஹனீபா சார் அவர்ஹளுக்கும், அவர்ஹளது குடும்பத்தினருக்கும் எனது கனிவான " அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு."
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross