‘ஜன்சேவா கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம்’என்ற பெயரிலான - வட்டியில்லா கடன் வழங்கும் சங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜன்சேவா பிரநிதிகளின் பங்கேற்புடன் தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அந்த வரிசையில், இலங்கையில் 2014 நவம்பர் 14 அன்று இலங்கையிலும், 16 அன்று சிங்கப்பூரிலும் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. விரிவான விபரம் வருமாறு:-
‘ஜன்சேவா கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம்’ என்ற பெயரிலான - வட்டியில்லா கடன் வழங்கும் சங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் நோக்குடன், இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து, ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், அதன் நிர்வாகிகளான எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோரடங்கிய - ஜன்சேவா பிரதிநிதிகள் குழு இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்றது.
இலங்கையில் காவாலங்கா சார்பில் சிறப்புக் கூட்டம்:
இலங்கை தலைநகர் கொழும்பு - கொள்ளுப்பிட்டியவிலுள்ள புகாரீ அன் கோ இல்லத்தில், 14.11.2014 வெள்ளிக்கிழமையன்று ஜன்சேவா அறிமுக சிறப்புக் கூட்டம், இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில் நடத்தப்பட்டது.
அமைப்பின் துணைத்தலைவர் ஐ.ஷாஜஹான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். செயலாளர் பி.எம்.ரஃபீக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
“ஜன்சேவா ஏன், எதற்கு?” என்ற தலைப்பில் எஸ்.இப்னு ஸஊத், காயல்பட்டினத்தில் ஜன்சேவா துவக்கப்பட்ட விபரங்கள் குறித்து, அதன் தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப், “வட்டி குறித்த இஸ்லாமிய பார்வை” எனும் தலைப்பில் எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நன்றி கூறினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், இலங்கை காயல் நல மன்ற அங்கத்தினர் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காவாலங்கா நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
சிங்கை கா.ந.மன்றம் சார்பில் சிறப்புக் கூட்டம்:
சிங்கப்பூரில், 16.11.2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஜன்சேவா அறிமுக சிறப்புக் கூட்டம், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அதன் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டது. ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், காயல்பட்டினத்திலிருந்து வந்திருந்த ஜன்சேவா பிரதிநிதிகள் குழுவை அறிமுகப்படுத்திப் பேசினார்.
“ஜன்சேவா ஏன், எதற்கு?” என்ற தலைப்பில் எஸ்.இப்னு ஸஊத், காயல்பட்டினத்தில் ஜன்சேவா துவக்கப்பட்ட விபரங்கள் குறித்து, அதன் தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப், “வட்டி குறித்த இஸ்லாமிய பார்வை” எனும் தலைப்பில் எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
ஜன்சேவா குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பிரதிநிதிகள் குழுவினர் விளக்கமளித்தனர்.
சிங்கை காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் நன்றி கூற, ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில், சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிங்கப்பூர் காயல் நல மன்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
படங்கள் (சிங்கப்பூர்):
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
ஜன்சேவா பிரதிநிதிகள் குழுவின் தாய்லாந்து, ஹாங்காங் சுற்றுப்பயணம் குறித்த விபரங்கள், பிரதிநிதிகள் அனைவரது பேச்சுக்களின் முழு விபரங்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இலங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |