2000ம் ஆண்டில் அமலுக்கு வந்த Municipal Solid Wastes (Management and Handling) Rules சட்டம்,
பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, இறுதி செய்யப்பட்ட சட்டமாகும்.
எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் - குப்பைக்கொட்ட தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் சில ஆண்டுகளிலேயே - அருகாமையில்
குடித்தனங்கள் உருவாகுவதால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு BUFFER ZONE விதிமுறை இச்சட்டத்தில் இணைக்கப்பட்டது.
தேர்வு செய்யப்படும் குப்பைக்கொட்டப்படும் இடம், 20 - 25 ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய அளவில் இருக்கவேண்டும் என்ற விதிமுறையையும்
இந்த சட்டம் கொண்டுள்ளது. எனவே - குப்பைக்கொட்டப்படும் இடம் உருவாகும் இடத்தில், இக்காலக்கட்டிதிற்கான (20 - 25 ஆண்டுகள்)
வளர்ச்சியையும் கணக்கில் எடுக்க வேண்டி உள்ளதால், இந்த சட்டத்தின் பார்வையில் BUFFER ZONE மிகவும் அவசியமாகிறது.
இந்த சட்டத்தின் SCHEDULE III, ஷரத்து 7, குப்பைக்கொட்டப்படும் இடத்தின் ஆயுட்காலம் குறித்து கீழ்க்காணுமாறு தெரிவிக்கிறது.
...
7. The landfill site shall be large enough to last for 20-25 years.
...
மேலும் - இந்த சட்டத்தின் SCHEDULE III, ஷரத்து 9, BUFFER ZONE குறித்து கீழ்க்காணுமாறு தெரிவிக்கிறது.
...
9. A buffer zone of no-development shall be maintained around landfill site and shall be incorporated in the Town Planning Department's land-use plans.
...
அதாவது - குப்பைக்கொட்ட தேர்வு செய்யப்படும் இடத்தினை சுற்றி வளர்ச்சிகளுக்கு அனுமதியில்லாத காப்பு பகுதி பராமரிக்கப்பட்டு, நகர் வளர்ச்சி
துறையின் திட்டத்தில் அது குறித்த விபரம் இணைக்கப்பட வேண்டும் என அந்த ஷரத்து தெரிவிக்கிறது.
பயன்பாட்டில் உள்ள குப்பைக்கொட்டும் இடத்தினை தவிர்த்து, புதிய இடங்களில் குப்பைகள் கொட்ட இடம் தேர்வு செய்யும் மாநகராட்சிகள் /
நகராட்சிகள் / டவுன் பஞ்சாயத்துகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனைத்து விபரங்களையும் சமர்ப்பித்து - Municipal Solid Wastes
(Management and Handling) Rules சட்டம் விதிமுறைகள் படி, அதற்குரிய படிவத்தினை நிரப்பி (படிவம் 1) அனுமதி பெற வேண்டும்.
அந்த படிவத்துடன் இணைக்கப்படவேண்டிய விபரங்களில் - இடம் அமைந்துள்ள பகுதியின் (BUFFER ZONE உட்பட தொடர்பான அனைத்து
தகவல்களையும் கொண்ட) வரைப்படங்களும் அடங்கும்.
Municipal Solid Wastes (Management and Handling) Rules சட்டம் - படிவம் 1
இந்த சட்டம் எவ்வாறு அமல் செய்யப்படுகிறது என்பதனை கண்காணிக்க - நீதிமன்றங்களும் தற்போது ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன.
2013ம் ஆண்டு, மத்திய அரசு - இந்த சட்டங்களின் சில விதிமுறைகளை தளர்த்த - Municipal Solid Wastes (Management and Handling) Rules
2013 என்ற மாதிரி (DRAFT) சட்டத்தினை வெளியிட்டது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்தும், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தடையினை தொடர்ந்தும் இந்த புது சட்டத்தினை
அமல்படுத்தும் திட்டத்தினை - மத்திய அரசு அப்போது கைவிட்டது.
எனவே - நீதிமன்றங்கள் இவ்விசயங்களில் கடுமையாக இருப்பதால் - BUFFER ZONE உருவாக்கப்பட்ட தகவல்கள் இல்லாமல், மாசு கட்டுப்பாட்டு
வாரியம், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் - குப்பைக்கொட்ட அனுமதி வழங்காது.
மேலும் - சுற்றுச்சூழல் துறைகள், நீதிமன்றங்கள் தவிர்த்து - அரசின் பிற துறைகளும் இந்த சட்டம் எவ்வாறு அமல் செய்யப்படுகிறது என்பதனை
கண்காணிக்கின்றன. உதாரணமாக - மத்திய அரசின், தணிக்கை மற்றும் கணக்கு துறையின் கீழ் செயல்புரியும் மண்டல பயிற்சி மையத்தின்
(Regional Training Centre New-Delhi) ஓர் அங்கமான, Office of Principal Director (Scientific Departments) - அவ்வப்போது,
Municipal Solid Wastes (Management and Handling) Rules 2000 சட்டம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதனை ஆய்வும் செய்கிறது.
சமீபத்தில் இவ்வமைப்பு சுற்றுக்கு விட்ட கேள்வி பதில் தாளில் (Questionnaire) உள்ள BUFFER ZONE குறித்த கேள்வி
ஒன்று...
11. Has a buffer zone of no-development been maintained around landfill site and incorporated in the Town Planning
Department’s land-use plans?
|