இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், கேரளாவிலிருந்து வருகை தந்திருந்த கல்வியாளர் செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றியுள்ளனர்.
இந்தியாவில் கல்வி காவிமயமாக்கப்படுவதையும், கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வையும் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 30.12.2014 அன்று காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் ஹாஜியார் நினைவு மேடையில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அதன் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், சிங்கப்பூர் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் பாளையம் முஹம்மத் ஹஸன், ரியாத் காயிதேமில்லத் பேரவை செயலாளர் ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின், தூத்துக்குடி மாநகர முஸ்லிம் லீக் தலைவர் நவ்ரங் சஹாபுத்தீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரேஸ்புரம் மீராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கத்தர் காயிதேமில்லத் பேரவை செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர், கேரள மாநில இளைஞரணி நிர்வாகி ஷாஜி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் மலையாள மொழியில் சிறப்புரையாற்ற, கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வுாகி ஆர்.பீ.எம்.ஷாஹுல் ஹமீத் அதைத் தமிழாக்கம் செய்தார்.
கட்சியின் காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் லீக் கிளைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, பெத்தப்பா சுல்தான், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.இசட்.சித்தீக், எலக்ட்ரீஷியன் பஷீர், இப்றாஹீம் இப்னு அத்ஹம், எம்.எச்.அப்துல் வாஹித், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல்களுள் உதவி:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |