காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் அலுவலகம், முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு, புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய அலுவலகத் திறப்பு விழா, நேற்று (டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினரும், தொழிலதிபருமான எஸ்.செய்யித் அஹ்மத் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத்தலைவரான தொழிலதிபர் எஸ்.அக்பர்ஷா, செயலாளர் மற்றும் தாளாளரான டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, உதவி செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளியின் நிர்வாகக் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் SBB புகாரீ
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |