தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று (டிசம்பர் 29 திங்கட்கிழமை) 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமுமுக தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத் தலைமையுரையாற்றினார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எம்.ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத், மமக மாநில அமைப்புச் செயலாளர் பி.ஜோஸப் நெலாஸ்கோ, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் முர்ஷித் முஹ்ஸின், தமுமுக நகர செயலாளர் எம்.ஏ.ஆஸாத், மமக நகர செயலாளர் எஸ்.ஏ.கே.ஐதுரூஸ், ஹாங்காங் மண்டல பொறுப்பாளர் ஹாஜா அரபி, கத்தர் மண்டல பொறுப்பாளர் ஜெ.ஜெ.இஸ்மாஈல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யித், மாநில செயற்குழு உறுப்பினர் காயல் தைமிய்யா ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
தமுமுக நகர தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை, எம்.ஐ.ஏ.காதர், எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம், எஸ்.எம்.ஜிஃப்ரீ, ஏ.நஜீப், தமீம் அன்ஸாரீ, மவ்ஜூத், ஏ.ஆர்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.முஜீபுர்ரஹ்மான், ஜெய்லானீ, ஆர்.பீ.எஸ்.நவாஸ், ஜெ.மொகுதூம் முஷ்தாக், ஏ.நெய்னா, ஜெ.சபீர் அலீ, ஏ.யாஸர் அரஃபாத், என்.ஷேக் மெய்தீன், எம்.அசாருத்தீன், எஸ்.முஹம்மத் ஷேக் மொய்தீன், ஏ.முஹம்மத் குலாம் ராபி, ஐ.முஹம்மத் பாசில் உள்ளிட்ட தமுமுக - மமக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 11:20 / 04.01.2015] |