பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளை மாணவ-மாணவியர் எளிதில் எதிர்கொள்ள, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை மாணவரணியின் சார்பில், இம்மாதம் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.00 மணி முதல் 20.00 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் ஷம்சுத்தீன் துவக்கவுரையாற்ற, மாவட்ட தலைவர் அய்யூப் அறிமுகவுரையாற்றினார்.
மாணவரணி மாநில செயலாளர் அல்அமீன், ஒருங்கிணைப்பாளர் உமர் ஃபாரூக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
அதிக மதிப்பெண்களைப் பெறல், குறித்த நேரத்தில் விடையளித்தல், கையெழுத்தின் முக்கியத்துவம், தேர்வு பயத்தைப் போக்கல், தேர்வு காலங்களில் பேணப்பட வேண்டிய உணவு முறைகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக அவர்களது உரைகள் அமைந்திருந்தன.
அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி இணைச் செயலாளர் ரஸீன் நிறைவுரையாற்றினார்.
இப்பயிற்சி முகாமில், காயல்பட்டினம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளிலிருந்து 10ஆம், 12ஆம் வகுப்புகளில் பயிலும் 900 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு, முக்கிய வினாக்களின் தொகுப்பு (Q-Bank) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
‘தேக்’ முஜீப்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |