உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பயோகேஸ் திட்டத்தை காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்திட - தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதியளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தைச் செயல்படுத்திட அண்மையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பெறப்பட்ட குறைந்த ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பணியானையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
காயல்பட்டினத்தில் பயோகேஸ் திட்டத்தை அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து நகரில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. முறையான எந்த விபரமும் பெறப்படாமலும், திட்டமிட்டும் சில கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முதலாக இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் - வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் தலைமையில் அவர் உள்ளிட்ட 9 உறுப்பினர்களும், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜும் நேரில் சென்று பயோகேஸ் திட்டத்தைப் பார்த்து, தேவையான விளக்கங்களைப் பெற்றதோடு, திட்டச் செயல்பாட்டைப் பாராட்டி தமது கருத்துக்களையும் பதிவு செய்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கும் இத்திட்டத்தைப் பார்த்து, விளக்கங்களைப் பெற்றதோடு, தனது பாராட்டுக் கருத்தையும் பதிவு செய்து வந்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டப்படும் தயக்கம், அதற்குக் காரணங்களாக பல்வேறு கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து சரியான விபரத்தைப் பெற்றிடுவதற்காக, வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு - இம்மாதம் 17ஆம் நாள் புதன்கிழமையன்று நேரில் சென்று, பயோகேஸ் ப்ளான்ட் அமைந்துள்ள பகுதியை நேரில் பார்த்தறிந்ததோடு, ஆற்காடு நகர்மன்றத் தலைவர் புருஷோத்தமன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோரைச் சந்தித்து, தேவையான விளக்கங்களும் பெறப்பட்டுள்ளது.
இதன் ஒளிப்பதிவுகள், காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பில் சிறப்பு நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டு, உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில், இம்மாதம் 30ஆம் நாள் முதல் வரும் 2015 ஜனவரி மாதம் 05ஆம் நாள் வரை - சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணைப் பிரசுரம்:-
பயோகேஸ் திட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
MEGA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|