காயல்பட்டினத்தில், முக்கியமான சாலைகளின் சந்திப்பில், இரு புறங்களிலிருந்தும் வரும் வாகனங்கள் ஒன்றையொன்று அறியாமல் வருகையில் ஏற்படும் எதிர்பாரா போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க - அவ்வாறான இடங்களில் குவிவிழிக் கண்ணாடியை நிறுவுவதென, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற - அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு,
முதற்கட்டமாக காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையில், கடந்த நவம்பர் மாதம் 12ஆம் நாளன்று ஒரு குவிவிழிக் கண்ணாடியும்,
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இரண்டு குவிவிழிக் கண்ணாடிகளும்,
கடந்த பிப்ரவரி மாதம் 03ஆம் நாளன்று அல்ஜாமிஉல் அஸ்ஹர் முனையில் ஒரு குவிவிழிக் கண்ணாடியும் பொருத்தப்பட்டது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் ஒருவழிப்பாதை - பெரிய நெசவுத் தெரு முனையில் இம்மாதம் 24ஆம் நாள் புதன்கிழமையன்று 13.30 மணியளவில் ஒரு குவிவிழிக் கண்ணாடி நிறுவப்பட்டுள்ளது.
தக்வா தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், துணைச் செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ, அங்கத்தினரான வாவு எம்.எம்.உவைஸ், சோனா காதர், வாவு ஷாஹுல் ஹமீத், ரிழ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
தக்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |