காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இவரின் படைப்புகளின் ஒன்றான சீறா வசன காவியம், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையின் பகுதி நேர ஆய்வாளராக இருக்கும் சு.முரளி எம்.ஏ., பி.எட். என்பவரால் சமீபத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.
காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவரின் இலக்கியப் பங்களிப்பு - ஓர் ஆய்வு என்ற தலைப்பில் - சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் (Phd) பட்டத்திற்கான ஆய்வேட்டினையும் - ஆய்வாளர் சு.முரளி சமர்ப்பித்துள்ளார்.
புதுக்கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையின் ஆய்வு நெறியாளர் மற்றும் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.முகம்மது அலியின் நெறியாள்கையின் கீழ் உருவான இந்த ஆய்வேடு சம்பந்தமான பொது வாய்மொழித் தேர்வு டிசம்பர் 24 (புதன் கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கல்லூரியில் அமைந்துள்ள என்.எம். ஜக்கரிய்யா அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த பொது வாய்மொழித் தேர்விற்கு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அறிஞர் பொது மக்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்க்கப்படுகிறார்கள்.
தகவல்:
பி.எம்.சதக்கத்துல்லாஹ்,
தைக்காத் தெரு.
|