DCW ஆலைக்கு எதிராக SDPI கட்சியினர் டிசம்பர் 30 அன்று முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதுகுறித்த விழிப்புணர்வு கைப்பிரசுரம் SDPI சார்பில் நகர் முழுக்க, பொதுமக்களிடம் நேரில் வழங்கும் நிகழ்வு கடந்த 14-ம் தேதி முதல், பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் (21/12) சுற்று வட்டார ஊர்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து SDPI கட்சியினர் அழைப்புவிடுத்தனர்.
கொழுவைநல்லூர் - ஊர் தலைவர் - அண்ணமரியான்
கீழனூர் வடக்கு - ஊர் தலைவர் - பிச்சாண்டி
சேந்தமங்களம் - RC Church - மரிய அசு
பழையகாயல் - கூட்டுறவு வியாபாரி சங்க தலைவர் - சங்கர்
சேந்தமங்களம் - ஊர் தலைவர் - ஜஸ்டீன்
புன்னகாயல் - பெந்தகோஸ்தே சபை பாதிரியார் - குமைய்யா
கிராம விவசாய சங்க தலைவர் - முருகானந்தம்
கீழனூர் - மகளிர்குழு
தலைவன்வடலி - விவசாய சங்கம்
சேந்தமங்களம் - சொஸைட்டி மற்றும் ஊர் தலைவர் - கணேஷன்
சேந்தமங்களம் - பஞ்சாயத்து தலைவர் - துரை ராஜ்
தலைவன்வடலி - ஊர் தலைவர் - காளிதாஸ் மனோகர்
நேற்று (21/12) மாலை காயல்பட்டினம் கடற்கரையில் கூடியிருந்த மக்களிடம் DCW ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து விளக்கி, போராட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தனர்.
1. Re:.எல்லையில்லா எதிர்ப்பலைகள் எங்கும் சூழ வேண்டும்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[22 December 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38541
(கீழ்க்கண்ட என் கருத்தை மறுமுறையும் பதிவு செய்திருக்கிறேன்,
என்பதிவை ஏற்கனவே படித்தவர்கள் என்னை மனம் பொருத்தருள வேண்டுகிறேன்! இத்தருணமும் பொருத்தமிக காலம்தான் மறுபதிவிற்கு!)
இதை இதைத்தான் நான் எப்பொழுதும் எதிர்பார்ப்பவனாக இருக்கிறேன். நாம் என்ன செய்யப்போகிறோம்,அந்தநோக்கத்தின் நன்மை என்ன,அதை ஏன் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற முழு விபரங்கள் தெருவில் கூவி,கூவி வாடா,வடை விற்கும் பாமர பெண்கள் முதல் படித்துணர்ந்த மேதைகள் வரைககும் உள்ள மக்களுக்கு சென்றடைய வேண்டும்.இதுவே ஒரு கால்பங்கு வெற்றிக்கு சமம். இதே கருத்தை முன்னர் நடந்த மனித சங்கிலி போராட்ட அறிவிப்பு நேரத்திலும் சொல்லி இருக்கிறேன்.
மேலும்,இந்த வீடுதோறும் சென்று சொல்லும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தயவுசெய்து நம்மூர் எல்லையுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,நமதூரை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் நம்முடைய புண்ணிய நோக்கத்தை புரிந்துகொள்ள வைப்பதோடு அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும், ஆதரவையும் வென்றெடுக்க வேண்டும். இதில் நாம் வீரியத்தோடும்,விவேகத்தோடும் செயல்படுவோமேயானால் மிகப்பெரிய பலம் பொருந்திய எதிர்ப்பலைகள் அந்த நச்சி ஆலையைச்சூழ்ந்து ஆர்ப்பரித்து விடும் என்பதில் ஐயமில்லை.
இந்த எதிர்ப்பலைகளைக்கண்டு அந்த ஆலையின் அரக்ககுண தலைமை முதல் அவர்களுக்கு வால் பிடிக்கும் அத்தனை பேர்களும் அலறியடித்து ஓடும் அளவிற்கு நம் ஆர்ப்பாட்டம் அல்லாஹ்வின் உதவியால் அமையப்பட வேண்டும்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
2. Re:... posted byஅமீர் சுல்தான் (சவுதி அரேபியா)[23 December 2014] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38544
SDPI கட்சியின் முற்றுகை போராட்டத்திற்கு சுற்றுவட்டார மக்களின் ஆதரைவ பெறுதற்கான பிரச்சாரம் நல்லதொரு முயற்ச்சி. முற்றுகை போராட்டம் வெல்லட்டும்.
DCW ஆலைக்கொதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நாகர்ந்திருப்பதோடு முதல் வெற்றியும் கிடைத்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் உயிர் கொல்லி ஆலை கூலிக்கு ஆள் அமர்த்தி கலெக்டரிடம் மணு கொடுத்ததும், நமதூர் பற்றி பிறபகுதிகளில் அவதூறு நோட்டீஸ் ஒட்டியதும்.
போராட்டம் வீரீயமடையும் போது ஆலையை மூடுவதும் சாத்தியமாகும்.இன்ஷா அல்லாஹ்.
இதற்கு நமதூர் மக்களும் சுற்று வட்டார மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
ஆனால் முற்றுகை போராட்டம் நடைபெறும் நாட்களுக்கு முன்னும் அதே நாளன்றும் சகோதர அமைப்புகள் வேறு காரணங்களுக்காக கூட்டங்களை அறிவித்திருப்பது சற்று நெருடலாகவே படுகின்றது.
உயிர் கொல்லி ஆலையை விரட்டுவதில் தயக்கமா? என்ற கேள்விதான் தொக்கி நின்கின்றது.
என்றோ நாம் போராட்டத்தை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். இந்த போராட்டத்திற்காக sdpi கட்சி உறுப்பினர்கள் பிற மாவட்டங்களில் இருந்து நமதூர் வந்து தங்கி இருந்து போராட்ட களப்பணிகளை செய்து வருவதற்கு காயலின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற அமைப்ப்னர்களின் பொதுக்கூட்டங்கள் இந்த போராட்டத்தை வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். இந்த முற்றுகை போராட்டத்தின் வெற்றிதான் நாளை பிற அமைப்புகளயிம் இந்த ஆலை எதிர்ப்பு பணியை செய்ய உத்வேகம் ஊட்டும். இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஒத்துழைக்கும் அனைத்து அமைப்புகளயிம் காயலர்கள் பல பகுதியில் இருந்து கவனித்து கொண்டே வருகின்றனர். இதன் புகழையும், வெற்றியையும் இறைவனுக்கு உரித்தாக்கி காயலில் நன்மைக்காக அனைவர்களும் ஒற்றுமையுடன் ஓன்று படுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross