தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 29ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வியக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இறைவனின் அருளால், 20.12.2014 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகர அலுவலகத்தில், மாவட்ட துணைச் செயலாளர் முர்ஷித் முஹ்ஸின் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இம்மாதம் 29ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்திடவும், அதில் தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யித், மாநில செயற்குழு உறுப்பினர் காயல் தைமிய்யா ஆகியோரை உரையாற்ற அழைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
தமுமுக நகர கிளை வளர்ச்சி, புதிய கிளை துவக்கம், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளான ஆஸாத், ஜாஹிர், காதர், ஐதுரூஸ், தமீம் அன்ஸாரீ, ஜிஃப்ரீ, சபீர், ரிஃபாய், அசன், முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்.
தமீம் அன்ஸாரீ
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |