காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரை விமர்சித்து, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை ஆதரவாளர்கள் சார்பில், “ஆறுமுகநேரி சுற்றுவட்டார பகுதி மக்களின் தொழில் வளர்ச்சி பாதுகாப்பு சங்கம்” என்ற பெயரில் பின்வருமாறு சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது:-
இச்சுவரொட்டி, ஆறுமுகநேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் இச்சுவரொட்டி காணக் கிடைக்கவில்லை.
1. Re:...நெஞ்சில் உரமும் இல்லை நேர்மை திறனும் இல்லை posted bymackie noohuthmbi (kayalpaattinam)[22 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38540
நோட்டீஸ் வெளியிட்டிருப்பவர்கள் நெஞ்சில் உரமும் இல்லை நேர்மை திறனும் இல்லை. நோட்டீஸ் அச்சடித்தவர்கள் தொடர்பு எண் பெயர் இல்லை. நோட்டீஸ் அச்சடித்த அச்சகத்தின் பெயரும் இல்லை. ஒரு மொட்டை கடிதத்துக்கு என்ன மதிப்போ அதுதான் இதற்கும் உள்ளது.
இருந்தாலும் இந்த மொட்டை நோட்டீஸ் வெளியிட்டுளவர்களையும் அது அச்சடிக்கப்பட்ட அச்சகத்தையும் கண்டு பிடித்து தண்டனை கொடுக்க காவல் துறைக்கு அதிக நேரம் ஆகாது. சட்டப்படி இது குற்றமா அல்லது அநாமதேயங்கள் அன்னக் காவடிகள் பரதேசிகள் அடிக்கும் நோட்டீஸ்களுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்பதால் அதைக் கண்டு கொள்ள தேவை இல்லை என்று காவல் துறை சமாதானம் சொல்லுமா என்று தெரியவில்லை.
என்றாலும் DCW நிர்வாகத்தின் நல்லாசியுடன் அடிக்கப் பட்டுள்ள இந்த நோட்டீஸ் ஒரு வகையில் காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பின் எழுச்சியை கண்டு பயப்படுவதாகவே தெரிகிறது. 30ம் திகதி நடக்கவிருக்கும் SDPI போராட்டத்தை தடுக்கவும் இந்த மொட்டை நோட்டீஸ் பயன்படும் என்று நினைத்தார்களோ என்னவோ.
இன்னி விரலால் சூரியனை மறைக்க முடியாது.ஆட்டம் முடியும் போது விளக்கு அணையும்போது இப்படி ஒரு சுடர் மேலே வந்து பிறகுதான் முற்றாக அணையும். அந்த நாள் வெகு தூராதில் இல்லை என்பதை DCW உணர ஆரம்பித்திருக்கிறது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....தமிழ் நாட்டிலே...
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்று இந்த சாவுபுரத்து வந்தேறிகளுக்கு தெரியாது..
2. வேதனையின் உச்சாணியில்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[22 December 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38542
இந்த விமர்சன சுவரொட்டியை ஒட்டியவர்களுக்கு உண்மையிலேயே ஒரு சதவீதமாவது நமதூரைப் பற்றி அக்கறை இருந்திருக்குமேயானால், அடுத்த ஊர்காரர்களும் நம் அண்ணன் தம்பிகள்தனே என்ற உறவை விரும்பி இருந்தால்,
அந்த காயல் ஊர்மக்களும், அங்குள்ள அமைப்புகளும் என்னதான் சொல்கிறார்கள் என்பதை ஒரு தடவையாவது கேட்போமே, அவர்களின் நிலைப்பாடு நியாயமற்றது என்றால் அதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவோமே, அதையும் மீறி அவர்கள் நம்மை அலட்சியப்படித்தினால் அதற்குப்பின் அவர்களின் உண்மையற்ற நிலையை ஊரிலுள்ள அனைவர்களுக்கும் தெரியப்படுத்தும் வேலையில் இறங்கலாமே என்ற நிலையைத்தான் ஆறுமுகநேரிலுள்ள நடுநிலை வாதிகள் தேர்ந்தெடுப்பார்கள்!
ஆனால் இந்த சுவரொட்டியை ஒட்டிய வீணர்களோ, ஒரு மோசமான சதிசெயலுக்கு அடிமையாகி இவர்களை இயக்குபவர்களின் ஈனத்தனமான ஆணைகளுக்கு அடிபணிந்து அத்தலைமையின் கட்டளைகளை எந்த வடிவத்திலும் நிறைவேற்றவேண்டும் என்று, நம்முடைய எல்லா நிலைக்கும் எதிர்நிலை கட்டி வெறித்தனமாக வலம்வரும் வெறியர்கள் இவர்கள்!
தீமைக்குறிய காரியங்களை செய்வதில் எப்படி அவர்களின் ஒரு சிலர்கள் தீவிரம் காட்டுகிறார்களோ அதைப்பார்த்த பின்னராவது,அவர்களின் அநியாயச்செயலை நம் சிந்தையில் ஏற்றி,
நம் ஊரை, நம் மக்களை, நம் உடன்பிறவா சகோதர சகோதரிகளை காப்பாற்றுவது நம் தலையாய கடமையாகும். நாம் ஒட்டுமொத்தமாக போராடப்போகும் இந்த போராட்டத்தில் ஒருவர்கூட ஒதுங்கி விடாமல் ஒருமித்த உணர்வுவுடன் ஒருங்கிணைந்து ஒர் அணியாய் ஆர்ப்பரித்து, நம்முடைய ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் அருகிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கு மட்டுமல்ல அந்த நாசகார ஆலையின் அலறலையும் தாண்டி நம்முற்றுகை ஆர்ப்பாட்ட ஆராவாரம் ஓங்கி ஒலிக்கவேண்டும்!
இந்த ஆர்ப்பாட்டத்தின் வேகத்தையும், வீரியத்தையும் வலுவிழக்க எதிரிகள் உருவாக்கப்படுகிறார்கள், அவர்கள் உருத்தெரியாமால் ஓடி ஒழியவேண்டு மென்றால், அது நம் போராட்டத்தின் ஒற்றுமையின் உறுதியில்தான் இருக்கிறது.
இப்போராட்டத்தில் இந்த குறை அந்த குறை என்று எலும்புத்துண்டுகளுக்கு இரையாகும் சில ஈனப்பிறவிகள் ஒன்றிரண்டு இருப்பார்களேயானால், அவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கழித்தெறியவும் தயங்காதீர்கள். அவர்கள் உண்மையான காயலர்கள் அல்ல.காயலர்கள் என்று சொல்லி கயமத்தனமாக வாழும் மனித உருவ மிருகங்கள்!
இந்த ஊர் மக்களுக்கு துரோகம் செய்யும் இவர்களை, இந்த நச்சு ஆலை கழிவுக்கிருமியின் தாக்கத்தால் உயிரிழந்த ஆத்மாவும், உயிரிழக்க நாட்கள் எண்ணப்படும் நமதருமை சகோதர, சகோதரிகளும், இன்னும் இந்த நோயினால் பலவழிகளிலும் பாதிப்புக்குள்ளான பல குடும்பங்களின் கொதிப்புகளும்,பதுவாக்களும் இவர்களையும் இவர்கள் குடும்பத்தார்களையும் இலேசில் விட்டுவைக்கும் என்று நினைக்கிறார்களா? அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றட்டும்!
இந்த அளவிற்கு என் கருத்து பதிவை எந்த ஒருநாளும் நான் பதித்ததில்லை, இப்படி எழுத என் மனம் தள்ளப்பட்டதற்கு காரணம் இந்த நச்சு ஆலைக்கழிவு கிருமியின் தாக்கத்தின் பாதிப்பால் நானிழந்த உற்ற நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்த கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு பல இலட்சங்களை இழந்து பரிதவிக்கும் பல குடும்பங்களின் கண்ணீர் குளத்தில் மூழ்கி மூச்சி திணறி பாதிப்புக்குள்ளானவர்களில் நானும் ஒருவன் என்ற நிலையில் இருந்ததால் என்னைப்போல் பாதிக்கபட்டவர்களுக்குதான் இதன் உண்மையான வலி தெரியும் என்பதால்தான் இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதக்கூடிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
3. Re:... posted byummuhani kareem (kayalpatnam)[23 December 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 38548
வெளி நாடுகளில் தனது சொந்த பந்தங்களை விட்டு தனது வியர்வையை இரத்தத்தை உறிஞ்சு வேலை செய்யும் அந்த மக்களின் பணம் உனது கண்களை உறுத்துகிறதா?
இங்கு உள்ளவர்கள் எல்லாம் சம்பாதிக்காமல் தூங்குகிறார்களா? எங்கள் ஊர் மக்கள் எங்கிருந்தாலும் ஊர் நலனில் அக்கறை உள்ளபவர்கள்.
உயிரை உறிஞ்சி நீ சம்பாதிக்கும் கோடி கோடியான பணத்தை வைத்து எங்களை முடக்கலாம் என்று கனவு காணாதே!
நீ கலக்கும் கழிவு எங்கள் ஊர் கடலில் தானே கலக்கிறது ஆறுமுகநேரியில் கடல் இருக்கிறதா? இது கூட தெரியாத குப்பைகளுக்கு வேண்டுமானால் உன் மொட்டை நோடீசை பார்த்து மொட்டையாகலாம்.
இதையெல்லாம் பார்க்கும் போது நீ எங்களுக்கு பயப்பட ஆரம்பித்து விட்டாய் என்று தெரிகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பில் நோடீஸ் வருகிறது பாவம் ஒவ்வொருத்தரையும் தூண்டி விடுவதற்கு உனக்கு எவ்வளவு பணம் செலவாகிறதோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross