முத்துநகர் எக்ஸ்பிரஸ் உட்பட 6 ரயில்கள் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு :
விருதுநகர் பாதையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் இரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதியைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 29ம் தேதி முதல்
சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ்,
திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ்,
சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,
திருச்சி - திருநெல்வேலி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்,
சென்னை- திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ்,
சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ்
உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரயில்களும்,
தூத்துக்குடி / திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்களும் மின் பாதையில் இயக்கப்படுகிறது.
தகவல்:
www.tutyonline.com |