இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் முதல் நாள் முதல் 12ஆம் நாள் வரை, காயல்பட்டினத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் தைக்காக்களில், நபிகளார் புகழ் பாடும் மவ்லித் மஜ்லிஸும், சில பள்ளிகளில் கூடுதலாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், மத்ரஸாக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஸலவாத் மஜ்லிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதும், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் அவற்றில் திரளாகக் கலந்துகொள்வதும் வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, சிறுபள்ளி, பெரிய பள்ளி, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஜாவியா, புதுப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் நடப்பாண்டு மவ்லித் மஜ்லிஸ் இம்மாதம் 23ஆம் நாள் துவங்கியது. 2015 ஜனவரி 03ஆம் நாளன்று நிறைவுறும். நாள்தோறும் மஃரிப் தொழுகைக்குப் பின் - 19.00 மணியளவில் துவங்கி, 21.00 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சில பள்ளிவாசல்களில் மாலை வேளைகளில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெறுகிறது.
அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸ் காட்சிகள்...
குருவித்துறைப் பள்ளியில் நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸ் காட்சிகள்...
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.N.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப்
கடந்தாண்டு நடைபெற்ற மவ்லித் மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெரிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |