காயல்பட்டினம் மழை வெள்ள நிவாரணக் குழுவின் நான்காம் அமர்வு குறித்து அவ்வமைப்பின் சார்பில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
மழை வெள்ள நிவாரணக் குழுவின் நான்காம் அமர்வு 15-12-14 திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் நகர முஸ்லீம் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நிவாரண குழுவினர்களும்,வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் காயலர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்று; ஆலோசனைகளை வழங்கினர். பல்வேறு கருத்து பரிமாற்றங்களுக்கு பின்னர் கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) மழை,வெள்ள நிவாரண குழுவின் களப்பணியில் ஆய்வு செய்து தெரிவு செய்யப்பட்டு காயல் பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்ட 30 பயனாளிகள் வசிக்கும் பாதிக்கப் பட்ட குடிசைகளிலிருந்து 20 குடிசைகள் புணரமைப்பு பணிக்காக கண்டறியப்பட்டது. இதில் நமது விதிமுறைகளுக்கு உட்பட்டு 12 குடிசை வாசிகள் மட்டுமே உரியே ஆவணங்களை வழங்கியுள்ளனர். எஞ்சியுள்ள 8 குடிசைகளுக்குறிய ஆவணங்களை விரைவில் வழங்குவதாக உரியவர்கள் வாக்களித்திருப்பினும்; முறையான ஆவணங்களை இதுவரை நம்மிடம் தந்துள்ள 12 குடிசை வாசிகள் மட்டும் அவர்களின் குடியிருப்பை புணரமைப்பு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
2) மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணம் தேவைப்படும் பயனாளிகளுக்கு நிரந்தரமாக அவர்களுக்கு உரிய வசிப்பிடம் அமையும் விதத்தில் உருவாகும் இல்லங்களை வடிவமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அதாவது, வானக்குழி ( Foundation ) உடன் கூடிய நான்கு கான்கீரிட் தூண்களை ( Concrete pillar ) களை எழுப்பி, அதற்கு மேல் அலுமினிய ( Colour Coated ) கூரைகளை அமைத்து, தென்னங்கிடுவுகளை கொண்டு நாற்புறமும் அடைத்து கொடுத்து குடியிருப்புகளை உருவாக்குவது சிறந்தது என இக்கூட்டம் கருதுகிறது.
மேலும் வருங்காலங்களில் அவ்வில்லங்களில் குடியிருப்போர் அவர்களின் பொருளாதார சூழ்நிலை மேன்படும்போது அலுமினிய சீட்டை அகற்றி கான்கிரீட் போடவும், கிடுவுகளை அகற்றி சுவர் எழுப்பவும், அதன் மூலம் முழுமைப்பெற்ற வீட்டை அவர்கள் அடைந்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுமென இக்கூட்டம் கருதுகிறது.
பாதிக்கப்பட்டோரின் வேண்டுகோள், பொறியாளரின் வழிகாட்டல் இவைகளை அடிப்படையாக வைத்து இக்கூட்டத்தில் பங்கேற்றோரின் நீண்ட ஆய்வில் முற்கண்டவாரு முடிவு செய்து தீர்மானிக்கப்பட்டது.
நிவாரண பணியில் முற்கண்டவாறு அமையும் இல்லம் ஒன்றுக்கு ரூபாய் 60,000 வரை செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால், இவ்வகைக்கு உதவ முன்வரும் நல்உள்ளங்கள் உலகமெங்கும் உள்ள காயல் நல மன்றங்கள் மற்றும் நிறுவனங்கள் உரிய காலத்தில் தங்களது நன்கொடைகளை பொருளாளர். K.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் (I.O.B.A/c.049101000018919) வழங்கி விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்கும் படி இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இந்த வகைக்கு துவக்கமாக ஒரு இல்லம் அமைய ரூபாய் 60,000 வழங்க முன்வந்துள்ள தாய்லாந்து காயல் நல மன்றத்திற்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
வடகிழக்கு பருவ மழை கனமழையாக மாரி காயலபட்டணத்தில் பெரிதும் பாதிப்பை உருவாக்கிய நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவழங்கிய பொது நிறுவனங்கள், சமூக அமைப்புகள், உலகமெங்குமுள்ள காயல் நலமன்றங்கள் ஆகியவகைகளுக்கும் எமது நிவாரண குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று பொது மருத்துவ முகாம் நடத்தியும் சுகாதர பணிகளை மேற்கொண்டும் உதவிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய மாவட்ட துணை இயக்குனர், தமிழ் நாடு சுகாதார துறையினருக்கும்; சர்வ கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளை ஒருங்கிணைத்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திய நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சகோதரர்களுக்கும் மற்றும் நம்மை நேரில் சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தப் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரண பணிகளை விரைவாக செய்ய உதவிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முன்னால் சட்டமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் எஸ். ராஜேந்திரன், எல்.அய்யலு சாமி மற்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.அழகு முத்து பாண்டியன் அவர்களுக்கும் அக்கட்சியின் முன்னோடிகளுக்கும் நிவாரண பணிகளை முடுக்கி விட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பாதிக்கப்பட்டோருக்கு உதவி பொருட்கள் வழங்கிய காயல் பைத்துல்மால் அறக்கட்டளையினருக்கும் களப்பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கும் இக்கூட்டம் இதய பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |