சமையல் எரிவாயுக்கான (LPG) மானியம் பொது மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் (Direct Benefits Transfer For LPG (DBTL) Consumers Scheme திட்டத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து காயல்பட்டணம்.காம் இணையதளம் - 10 பாகங்களில், விரிவான செய்தியினை வெளியிட்டது.
ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண் இல்லாதவர்கள் என இரு வகை வாடிக்கையாளர்களுக்கு என 4 படிவங்களை அரசு வடிவமைத்திருந்தது. மேலும் - மானியம் பெற விரும்பாதவர்களுக்கு என ஒரு படிவமும் வெளியிடப்பட்டிருந்தது.
குறைகள் குறித்த படிவமான படிவம் 6 தவிர்த்து, ஐந்து வகையான படிவங்கள் உள்ளதால் - பலர் குழப்பத்தில் உள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து, அரசு - தற்போது, ஒரே படிவத்தை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் - இந்த ஒரு படிவத்தையோ, ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐந்து படிவங்களில் தங்கள் நிலைக்கு பொருத்தமான படிவங்கலையோ பயன்படுத்தலாம்.
இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த படிவம்
இந்த படிவத்தை எவ்வாறு நிரப்புவது?
*** ஆதார் எண் வைத்துள்ளவர்கள் இந்த படிவத்தை இரண்டு நகல்கள் எடுக்க வேண்டும்
*** ஆதார் எண் இல்லாதவர்கள் அல்லது மானியம் பெற விரும்பாதவர்கள் ஒரு நகலை பயன்படுத்தினால் போதுமானது
(a) ஆதார் எண் வைத்துள்ளவர்கள் செய்யவேண்டியது
(1) ஆதார் எண் வைத்துள்ளவர்கள் இந்த படிவத்தை இரண்டு நகல்கள் எடுக்க வேண்டும்.
(2) ஆதார் எண் உள்ளவர் என தெரிவிக்கும் விதமாக வழி 1 (OPTION 1) என்ற பகுதியில் டிக் செய்ய வேண்டும்
(3) படிவத்தில் பகுதி A, பகுதி B, பகுதி C என மூன்று பகுதிகள் உள்ளது
(4) விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டிய நகலில் பகுதி A மற்றும் பகுதி B மட்டும் நிரப்ப வேண்டும்
(5) வங்கியிடம் கொடுக்க வேண்டிய நகலில் பகுதி A, பகுதி B, பகுதி என 3 மூன்று பகுதிகளையும் நிரப்ப வேண்டும்
(6) பகுதி A க்கான இணைப்பாக சமீபத்திய ரசீது, DGCC புத்தகத்தின் முதல் பக்க நகல் அல்லது வாடிக்கையாளர் என விநியோகஸ்தர் ஊர்ஜிதம் செய்த சான்றிதழ் நகல் சமர்ப்பிக்கவேண்டும்
(7) பகுதி B க்கான இணைப்பாக ஆதார் அட்டை நகலை இணைக்க வேண்டும்
(8) பகுதி C க்கான இணைப்பாக வங்கி பாஸ் புக் நகல், வங்கி கணக்கு நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை இணைக்க வேண்டும்
(9) நிரப்பிய பின்னர் ஒரு நகலினை (பகுதி A மற்றும் பகுதி B நிரப்பப்பட்ட) விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும். மற்றொரு நகலை (பகுதி A, பகுதி B, பகுதி C நிரப்பப்பட்ட) வங்கியிடம் கொடுக்க வேண்டும்
(b) ஆதார் எண் இல்லாதவர்கள் செய்யவேண்டியது
(1) ஆதார் எண் இல்லாதவர்கள் இந்த படிவத்தை ஒரு நகல் எடுக்க வேண்டும்.
(2) ஆதார் எண் இல்லாதவர் என தெரிவிக்கும் விதமாக வழி 2 (OPTION 2) என்ற பகுதியில் டிக் செய்ய வேண்டும்
(3) படிவத்தில் பகுதி A, பகுதி B, பகுதி C என மூன்று பகுதிகள் உள்ளது
(4) பகுதி A மற்றும் பகுதி C மட்டும் நிரப்பி விநியோகஸ்தரிடமோ அல்லது வங்கியிடமோ சமர்ப்பிக்கலாம்
(5) பகுதி A க்கான இணைப்பாக சமீபத்திய ரசீது, DGCC புத்தகத்தின் முதல் பக்க நகல் அல்லது வாடிக்கையாளர் என விநியோகஸ்தர் ஊர்ஜிதம் செய்த சான்றிதழ் நகல் சமர்ப்பிக்கவேண்டும்
(6) பகுதி C க்கான இணைப்பாக வங்கி பாஸ் புக் நகல், வங்கி கணக்கு நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை இணைக்க வேண்டும்
(c) மானியம் வேண்டாம் என முடிவெடுப்பவர்கள் செய்யவேண்டியது
(1) மானியம் வேண்டாம் என முடிவெடுப்பவர்கள் இந்த படிவத்தை ஒரு நகல் எடுக்க வேண்டும்.
(2) மானியம் வேண்டாம் என தெரிவிக்கும் விதமாக வழி 3 (OPTION 3) என்ற பகுதியில் டிக் செய்ய வேண்டும்
(3) படிவத்தில் பகுதி A, பகுதி B, பகுதி C என மூன்று பகுதிகள் உள்ளது
(4) பகுதி A மட்டும் நிரப்பி விநியோகஸ்தரிம் சமர்ப்பிக்கவேண்டும்
(5) பகுதி A க்கான இணைப்பாக சமீபத்திய ரசீது, DGCC புத்தகத்தின் முதல் பக்க நகல் அல்லது வாடிக்கையாளர் என விநியோகஸ்தர் ஊர்ஜிதம் செய்த சான்றிதழ் நகல் சமர்ப்பிக்கவேண்டும்
விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின் படிவத்தின் இறுதியில் உள்ள ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளவும். |