தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. நீண்ட தொடர்மழையைத் தொடர்ந்து, சிறிது ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்தவண்ணம் உள்ளது.
இம்மாதம் 16ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 21.15 மணியளவில் சாரலாகத் துவங்கி, மறுநாள் (டிசம்பர் 17 புதன்கிழமை) 15.00 மணி வரை - சுமார் 18 மணி நேரம் சிறுமழை பெய்தவண்ணம் இருந்தது. சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் 18.15 மணிக்குத் துவங்கி 22.00 மணி வரை சிறுமழை பெய்து ஓய்ந்தது.
இன்று (டிசம்பர் 18 வியாழக்கிழமை) அதிகாலையில் சில நிமிடங்கள் சாரல் மழை பெய்துள்ளது. இன்று 13.30 மணி நிலவரப்படி, நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதமான வெயில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று (டிசம்பர் 18 வியாழக்கிழமை) பெறப்பட்டுள்ள மழைப்பதிவு பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 26.00 மில்லி மீட்டர் மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாவட்டத்திலேயே 3ஆவது அதிகபட்ச மழையாகும்.
டிசம்பர் 12ஆம் நாளின் மழை அளவு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |