சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 83-வது செயற்குழு கூட்டம் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக கூட்டரங்கத்தில் சென்ற 12.12. 2014 வெள்ளிக்கிழமை மஃரிபுக்குப்பின் நடைபெற்றது.
இனிய இந்நிகழ்வுக்கு சகோ.N.M.அப்துல் மஜீத் தலைமை ஏற்றார். சகோ.சட்னி S.M.முஹம்மது லெப்பை இறைமறை ஓதினார். சகோ.சீனா S .H .மொஹுதூம் முஹம்மது அனைவரையும் வரவேற்றார்.
மன்ற செயல்பாடுகள்:
“கடந்த 28-11-2014 வெள்ளியன்று மன்றம் சார்பாக யான்பு சென்று வந்த செய்திகள்,அங்கு நம் சகோதரர்களின் அன்பான வரவேற்பு, உளமான உபசரிப்புகளை நினைவு கூர்ந்ததோடு அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தும் இந்த நல்லதோர் சந்திப்பை சிறப்பாக செய்திட்ட ஜித்தா மற்றும் யான்பு சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றிகூறியும், மேலும் மன்றத்தின் செயல்பாடுகள் கடந்த கூட்டத்தின் தீர்மானங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளின் விபரங்களையும் எடுத்துக்கூறினார்” செயலாளர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான்.
"அண்மையில் நகரில் தொடங்கப்பட்டுள்ள ஜனசேவா என்ற வட்டியில்லா வங்கி குறித்த அறிமுக நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19/12/2014 வெள்ளி இரவு 7:30 மணியளவில் ஜித்தா இம்பாலா கார்டன் உணவக கூட்டரங்கில் நடக்க இருக்கிறதென்றும், அந்நிகழ்வில் அதன் நிர்வாகிகள் கலந்துகொண்டு வங்கி குறித்து விளக்கம் அளிக்கிறார்கள் என்றும், அதில் நம் காயலர்கள் திரளாக கலந்து கொள்வதோடு நண்பர்களையும் அழைத்து வந்து பயன்பெற வேண்டியும் மற்றும் மன்றம் சார்ந்த இதர செய்திகளையும் எடுத்துக்கூறினார் செயலாளர் சகோ. M.A. செய்யிது இப்ராஹீம்.
நிதிநிலை:
சந்தா, நன்கொடைகள் மூலம் பெறப்பட்ட தொகைகள், கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட உதவிகள் போக வரவு, செலவு, இருப்பு குறித்த நிதிநிலை விபரங்களை தெளிவாக தந்தார் பொருளாளர் சகோ.M.S.L.முஹம்மது ஆதம்.
உதவிகள்:
கல்வி மற்றும் மருத்துவ உதவி வேண்டி வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 2 உயர் கல்விக்கும், "ஷிஃபா" மூலம் பெறப்பட்ட மனுக்களான; சிறுநீரக வியாதி, சிறுநீரக புற்று நோய், குடலிறக்க பாதிப்பு, இருதய நோய், இருதய அறுவை சிகிச்சை, நெஞ்சக நோய், சர்க்கரை வியாதியால் கால் பாதிப்பு, கண் அறுவை சிகிச்சை என 8 மருத்துவத்திற்கும், ஆக 14 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் வெற்றி பெறவும், பிணியுற்றோர் நற்குணம் பெறவும் வல்ல இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்:
ரியாத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ.S.M.A.சதக்கத்துல்லாஹ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
தீர்மானங்கள்:
1.வரும் கல்வியாண்டு முதல் நம் நகரில் பெறப்படும் உயர் கல்வி மனுக்கள் சரியாக முறைப்படுத்தப்பட்டு "இக்ரஃ" மூலம் அனைத்து மன்றங்களுக்கும் அனுப்பிட வலியுறுத்தி மீண்டும் நினைவூட்டல்.
2. மக்கா வாழ் நம் காயல் சகோதரர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2015 ஜனவரி 02 ஆம் தேதி வெள்ளி மஃரிபுக்கு பின் மக்கா சகோ.Y.M.முஹம்மது ஸாலிஹ் இல்லத்தில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஒருங்கிணைப்பை சகோ.சீனா S .H. மொகுதூம் முஹம்மது தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மக்கா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் நம் காயல் சொந்தங்கள் தவறாது கலந்து சிறப்பிக்கவும் அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகிறது.
3. மன்றத்தின் 84-ஆவது செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 09.01.2015 வெள்ளிக்கிழமை நடாத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
4. இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2015 பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வெள்ளியன்று மன்றத்தின் 33-வது பொதுக்குழு கூட்டம் காயலர் குடும்ப சங்கமமாக "இஸ்திராஹா"வில் நடாத்திடவும் அதற்கான குழுக்கள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
சகோ.சொளுக்கு S.M.I .செய்யிது முஹம்மது சாஹிபு நன்றி கூற, சகோ.பிரபு s.J.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
சகோ.பொறியாளர் M .M .முஹம்மது முஹ்யித்தீன் அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
தகவல் மற்றும் நிலைப்படங்கள்:
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,
அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஅய்ப்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
16/12/2014.
|