Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:19:54 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15046
#KOTW15046
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 16, 2014
கல்வி காவிமயம், கட்டாய மதமாற்றம், மின் கட்டண உயர்வைக் கண்டித்து டிச. 30 அன்று முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! கேரளாவின் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் சிறப்புரையாற்றுகிறார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3695 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவில் கல்வி காவிமயமாக்கப்படுவதையும், கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வையும் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இம்மாதம் 30ஆம் நாளன்று பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், மலேஷிய நாட்டிலுள்ள இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர் பேரவை முன்னாள் இயக்குநரும், இந்திய சமய நல்லிணக்கப் பேரவையின் தலைவரும், கல்வியாளருமான பானக்காடு செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளதாகவும், அக்கட்சியின் காயல்பட்டினம் நகர பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 19.30 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.





கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் வாவு எஸ்.அப்துல் கஃப்பார், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத்தலைவர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கருத்துரையாற்றினர். நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித் நன்றி கூற, கட்சியின் கவுரவ ஆலோசகர் மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1 - டிச.30 அன்று பொதுக்கூட்டம்:

இந்தியாவில் கல்வி காவிமயமாக்கப்படுவதையும், கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வையும் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இம்மாதம் 30ஆம் நாளன்று பொதுக்கூட்டம் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2 - முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் வருகை:

டிசம்பர் 30 அன்று நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில முன்னாள் தலைவர் மறைந்த பானக்காடு ஷிஹாப் தங்ஙள் அவர்களின் புதல்வரும், மலேஷிய நாட்டிலுள்ள இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர் பேரவை முன்னாள் இயக்குநரும், இந்திய சமய நல்லிணக்கப் பேரவையின் தலைவரும், கல்வியாளருமான - பானக்காடு செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்களை சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றச் செய்வதென்றும்,

கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோரையும் இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற அழைப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3 - நிதிக்குழு:

டிசம்பர் 30 அன்று நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கான செலவினங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.ஏ.முஹம்மத் ஹஸன், எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகியோரை நிதிக்குழுவினராக நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4 - பொதுக்கூட்ட ஒருங்கிணைப்புக் குழு:

டிசம்பர் 30 அன்று நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மன்னர் பாதுல் அஸ்ஹப், எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.ஸித்தீக் ஆகியோரை ஒருங்கிணைப்புக் குழுவினராக நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 5 - சிறப்பு விருந்தினருக்கு வரவேற்பு:

காயல்பட்டினத்தில் டிசம்பர் 30 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கும் பானக்காடு செய்யித் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் அவர்கள் முதன்முறையாக நகருக்கு வருகை தருவதால், ஊர் மக்கள் பெருந்திரளாகச் சென்று அவருக்கு பைத் பாடி வரவேற்பளிக்க ஏற்பாடுகளைச் செய்வது என்றும், அதற்காக நகரின் அனைத்து ஜமாஅத்துக்களுக்கும் சென்று தகவல் தெரிவித்து அழைப்பு விடுப்பதற்காக, அரபி ஷாஹுல் ஹமீத், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், எலக்ட்ரீஷியன் பஷீர் ஆகியோரடங்கிய ஜமாஅத் சந்திப்புக் குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


தகவல் & படங்கள்:
S.A.இப்றாஹீம் மக்கீ

கூடுதல் படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 10:55 / 18.12.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. WELCOME TO KAYALPATNAM - RESPECTED KERALA YOUTH LEAGUE LEADER SAYYID MUNAVVAR ALI SHIHAB THANGAL
posted by V.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG) [17 December 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 38490

ASSALAMU ALAIKUM, WE HEARTLY WELCOME OUR RESPECTED BROTHER AND KERALA YOUTH LEAGUE LEADER SAYYID MUNAVVAR ALI SHIHAB THANGAL TO OUR NATIVE PLACE AND WE WILL HONOUR HIM FOR HIS SACRIFICE AND WELFARE WORK TOWARDS THE UMMAH.

KERALA MUSLIM LEAGUE LEADER IS Honourable Janab Syed Hyder Ali Shiab Thangal, please do correction on the news... Jazakallahu Khair.

http://indianunionmuslimleague.in/state-units-of-iuml

SAY ALLAHU AKBAR

MUSLIM LEAGUE ZINDABAD.

WE INVITE ALL BROTHERS AND SISTERS TO JOIN INDIAN UNION MUSLIM LEAGUE AND WORK FOR THE SAKE OF ALMIGHTY ALLAH FOR THE COMMUNITY AND IN NATION...

CURRENTLY MEMBERSHIP CAMP OF INDIAN UNION MUSLIM LEAGUE IS GOING ON TILL 31ST DECEMBER 2014 ALL OVER INDIA.

YOUR BROTHER IN ISLAM
V.M.T.MOHAMED HASAN
HONORARY SECRETARY
QUAID-E-MILLATH FORUM HONG KONG.

Moderator: News corrected as mentioned. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rilwan (TX) [17 December 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 38491

I wish muslim league also registers its condemnation against extremist groups who are hell bend on to destroy precious lives, twist religion to their wishes and misguide muslim youth.

I wish muslim league also registers condemnation on the extremists who believe in death and destruction - in the name of Islam - as only answer for people who disagrees with them.

I wish muslim league come forward as a progressive movement for Muslims, congratulate Malala for her nobel peace prize as a symbolic slap on the face of those twisted minded fanatics - in the name of Islam - who refuse people's right to education and want the women as second class subordinates.

I wish muslim league empathize with those who have lost and who are loosing their loved ones, running for their lives in the mountains, loosing their women who are forcefully traded as wives among the extremists and shut off from basic human ethics.

I wish muslim league condemn those who spread hatred on other muslims and non-muslims using the mimbers of many mosques in the country.

I wish muslim league warn against any muslim organization recruits helpless youths to commit criminal acts in the name of revenge and religion.

It is not just muslim league's responsibility, rather everyone elses too!!!

We cannot be hypocrites to condemn hindu extremists alone and to ignore Muslim extremists for the same worse things!!!

Everyday many lives are lost because somewhere in the world some think that their religious interpretation comes directly from almighty Allah and they have the right to enforce it on others while the others should shut up and be obedient!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved