Re:...ONE MAN'S FOOD IS OTHER MAN'S POISON posted bymackie noohuthambi (kayalpaattinam)[29 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38632
இங்கே கருத்து பதிவு செய்துள்ளவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம் என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள்.
இணையதளங்கள் அன்றாடம் ஊரில் நிகழும் நிகழ்ச்சிகளை ஊர் மக்கள் அவர்கள் உலகளாவி வாழ்கிறவர்களுக்கு போய் சேர வேண்டும். அந்த செய்தியை முதன்மையாக அறிவித்தவர்கள் என்ற பெருமையை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டு அவற்றை இங்கு நமக்கு அறியத்தருகிறார்கள். அது அவர்கள் கடமையும் கூட, தொழில் வெற்றிக்கான இலக்கும் அதுவே. அவர்களை குறை சொல்ல முடியாது.
முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு
ஒரு செய்திக்கு கருத்து பதிவு செய்பவர் அவர் மனோநிலைப் படி அவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை பதிவு செய்வார். அதை மற்ற எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதும் இல்லை.
எனவே அவரை குறை சொல்லவும் முடியாது.
ஆனால் கருத்துக்கள் பதிவு செய்யும்போது மற்றவர்கள் மனம் புண்படும்படி தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது என்பதும் ஆரோக்கியமான விவாதங்கள் பதிவு செய்யப்படுவதும் ஊடகங்களுக்கு அதன் நிறுவனர்களுக்கு உற்சாகம் தரும். படிப்பவர்களுக்கும் மயிலறகாய் அது வருடி விடும் சுகத்தை தரும்.
இறுக்கமான செய்திகளையும் உருக்கமான செய்திகளையும் நகைச்சுவை கலந்து பதிவு செய்தால் அது எல்லோரையும் மகிழ்விக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வேண்டும் என்பது என் போன்றோர்களின் அபிலாஷை. .
திருமணம் எனும் நிகாஹ் - இன்னும் ஒரு முக்கிய செய்தி பதிவு செய்ய மறந்து விட்டேன். LKG UKG படிப்பவர்கள் BAABAA BLACK SHEEP - TWINKLE TWINKLE LITTLE STAR என்ற RHYMES மனப் பாடமாக சொல்வார்கள்.. ஆனால் திருமண மேடையில் மணமகனாக வீற்றிருக்கும் ஒரு ஆலிமுக்கு கூட அடுத்த ஆலிம் EEJAAB QABOOL என்ற பெயரால் QABILTHU NIKAAHAHAA .என்று பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை இங்கு உள்ளது. அதை மணமகன் மனப் பாடமா சொல்ல எத்தனை நொடிகள் தேவைப் படும்?
2G, 3G.அலைக் கற்றை பற்றி விலாவாரியாக தெரிந்து வைத்திருக்கும் இந்த இளைய தலைமுறை இந்த முக்கியமான வாழ்வின் திருப்பு முனையில் நின்று கொண்டு QABILTHU NIKAAHAHAA VA THAZWEEJAHA என்பதை கூட சுயமாக சொல்ல தெரியவில்லையே என்பதை வேதனையுடன் இங்கு பதிவு செய்கிறேன்...
இந்த சீர் திருத்தங்களை ஒரே இரவில் செய்து முடிக்க முடியாது. மக்களிடையே பொது கருத்து வேண்டும். CONCENSUS என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். அந்த நிலை உண்டாகும் வரை இந்த நிலை தொடரும்....ஆனால் என்றோ ஒரு நாள் இந்த மாற்றங்கள் வந்தே தீரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross