இது அந்த நச்சுஆலையின் மூச்சு நிற்கப்போவதற்க்குறிய மிகப்பெரிய சாட்சி!
அன்பிற்க்குறிய பெண்டிலர் கூட்டங்களைப்பார்த்து என் மெய் சிலிர்த்துவிட்டது. இதுவரை எந்த போராட்டங்களிலும் நம்மூர் மாதர்கள் இதுபோன்ற ஒரு பெரிய படை எதிர்ப்பை காட்டியதை நான் கண்டறியவில்லை.வீதிக்கு வந்து போராடவேண்டுமென்ற வைராக்ககியமானது அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் பாதிப்பின் பிரதிபலிப்பே, வேதனையின் வெளிப்பாடே,.வீட்டிலுள்ள உயிர்களையும், உற்றார் உறவினர்களையும் இழந்து தவித்து துடித்ததின் உச்சகட்டம்!
கொதிப்பினால் கொந்தலித்தெலுந்து கூட்டத்தோடு இணைந்து நம் மனம் நொந்துகொண்டிருக்கின்ற உணர்வை கொட்டி தீர்க்க வேண்டும், காவல்துறை கைது செய்தாலும்,கம்பி எண்ணவும் தயார் என்ற வெறியில்
வீரமங்கைகளின் ஆவேசமிகு பேரணியை பார்த்து பிரமித்து விட்டேன்.உங்களுக்குள் இவ்வவளவு சோகச்சுமையா? சோகத்தை சுமந்துகொண்டு வந்த உங்கள் வருகையைப் பார்த்து என்னிரு கண்களும் செந்நிற நீராய் நிரம்பி பாய்ந்தது!
என்னைப்பொறுத்தவரை எந்த பெண்ணும் வீதிக்கு வந்து போராடத்தேவையில்லை என்ற கொள்கையில் உடன்பாடு உடையவன்!
ஆனால் உங்களின் வேகத்தையும் வெறியையும் பார்த்த எனக்கு நீங்கள் எப்படிப்பட்ட பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.ஆனந்தமாக கைதாகும் நீங்கள் நீங்களிழந்த ஆத்மாக்களுக்கு செய்யும் சிறிய கைமாரோ.
அன்பு தாய்க்குலமே உங்களை வாழ்த்த எனக்கு வார்த்தையும் வரவில்லை,ஓசையின்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் என் உள்ளமும் ஓர் நிதான நிலையை எட்டவில்லை!
ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.இந்த நச்சு ஆலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், என்னருமை சகோதரிகளே உங்களின் உயரிய எண்ணத்தினால் வீதிக்கு வந்து போராடிய உங்களனைவர்களின் பொற்பாதங்களையும் இதுவரை நில்லாத என்னிரு கண்களின் கண்ணீரால் கழுவ துடிக்கிறேன்.ஆனால் கடல் கடந்தல்லவா இருக்கிறேன். கண்ணியமிகு மங்கையர் திலகங்களே மறைதந்த அந்த இறையோனின் கிருபையினால் நீங்களனைவர்களும் நெடுநாட்கள் நீடொழி வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்தோங்குவீர்களாக ஆமீன்!.
இப்புண்ணியபோரில் கலந்துகொண்ட அத்துனை அன்புள்ளங்களுக்கும், குறிப்பாக இரவு பகல் பாராமல் பம்பரமாக சுழன்று பணியாற்றி போற்றுதலைப்பெரும் SPDI அமைப்பிற்கும்,சகோதரர் சுப உதயக்குமார் சகோதரர் சுந்தரராஜன் மற்றும் பல அமைப்புகளின் சகோதர சகோதரிகளுக்கும் என்னிதையம் பொங்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் தூய எண்ணங்களுக்குறிய நற்கூலியை கூடியவிரைவில் கொடுத்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross