Re:... posted byVilack sma (jeddah)[01 January 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38687
இன்று ஊரில் ,அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் சிறிய பெரிய அளவிலான பள்ளிவாசல்கள் , பெண்கள் தைக்காக்கள் , திருமண மண்டபங்கள் பல உள்ளன. இப்படி தெருவை அடைத்து அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுப்பதைவிட , தகுதிக்கு ஏற்றாற்போல் பொது இடங்களை பயன்படுத்தலாம் .
நகராட்சி , முகதாட்சண்யம் பாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலொழிய இதற்கு தீர்வே வராது .
தெருவை அடைத்து விருந்து வைப்பது திருமண வீட்டாரின் தவறு .
அடைப்பை எடுத்தபின்பும் , சில நேரங்களில் பந்தல் அப்படியே பல நாட்களுக்கு இருக்கும் . இது யார் தவறு என்ற ஆராய்ச்சியில் கிடைத்த தகவல் .... பந்தல்காரன் அடுத்தடுத்து சுமார் ஒருவார இடைவெளியில் நடக்கும் இரு வீட்டாரின் நிகழ்வுகளுக்கு ஆர்டர் எடுத்திருப்பான் . ஒரு வீட்டு நிகழ்வு முடிந்தபின் , அந்த பந்தலை கழற்றி அவனுடைய ஊர்ருக்கு கொண்டுசென்று , மீண்டும் கொண்டுவர ஆகும் செலவினங்களை மிச்சப்படுத்த , பந்தலை அப்படியே விட்டு விடுவாராம் . நகராட்சி இதுபோன்ற சமயங்களில் பந்தல் பொருட்களை அபகரித்தால் அவனுக்கும் புத்தி வரும் .
திருமண வீடு மட்டுமல்ல , கந்தூரி விழாக்களின்போதும் தெருமுழுக்க பந்தல் போடுவார்கள் , ஊர் முழுக்க ஒலிபெருக்கியை கட்டி அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுப்பார்கள். இதற்கெல்லாம் தீர்வு ........... இந்த ஜென்மத்தில் வராது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross