மாறுபட்ட அரசியல் தலைவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[02 January 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38696
எம்.ஜி.ஆர். அவர்கள் 1987ஆம் ஆண்டில் காலமானபோது எனக்கு வயது 12.
விபரமே தெரியாத அந்த வயதிலும் எம்.ஜி.ஆர். என்ற பெயரைக் கேட்டதும் என்னையறியாமல் ஓர் ஈர்ப்பு என் மனதில் தோன்றி மறையும். இருந்தாலும், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்து தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் முஸ்லிமானது குறித்து, பிடிக்காத ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, ஊரின் பெரும்பான்மை மக்களோடு நானும் திமுகவுக்கு ஆதரவாகவே கொடிபிடித்து வந்தேன். (எம்.ஜி.ஆர். கருத்து மட்டும்தான் கூறினார்... இன்றோ???)
தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் - திமுக வேட்பாளர் நெல்லை நெடுமாறனை எதிர்த்து அதிமுக சார்பில் இரா.அமிர்தராஜ் போட்டியிட்டார். (இரண்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதைத் தவிர அந்த வயதில் எனக்கு வேறெதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை.) தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக, நான் சார்ந்த இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், 22.00 மணியளவில் வந்து சேர்ந்தார். வெள்ளைக்காரனுக்கு சற்றும் குறையாத வெள்ளைவெளேர் முகத்தில் கருப்புக் கண்ணாடியணிந்து அவர் காட்சியளித்ததும், “என் இரத்தத்தின் இரத்தமே” என்ற சொற்களுடன் தனதுரையைத் துவக்கியதும் இன்றளவும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது.
1987ஆம் ஆண்டு அவர் இறந்த நிகழ்வை, தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது, மற்ற நண்பர்களெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க - நான் அவரது நல்லடக்கப் பேரணி காட்சிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஓரளவுக்கு விபரம் தெரியும் வயதை எட்டியது முதல், அவர் நம்முடன் இல்லையே என்று ஓர் ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கிறது...
அச்சு, காட்சி ஊடகங்களில் எம்.ஜி.ஆர். குறித்து சிறிய துணுக்குச் செய்தி வந்தாலும் கூட முதல் முக்கியத்துவம் கொடுத்து அவதானிக்கத் தோன்றுகிறது.
மொத்தத்தில், என் காலத்தில் வாழும் அரசியல் தலைவர்களுள் முற்றிலும் மாறுபட்டவராகவே அவர் காட்சியளிக்கிறார்.
ஏழை - எளியோர் மனதில் இன்றளவும் அவரும், அவரது இரட்டை இலை சின்னமும் நீக்கமற நிறைந்திருப்பதிலிருந்தே அவரது வாழ்வின் நல்ல தாக்கத்தை நன்குணர முடிகிறது.
என் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட ஷுஅய்ப் காக்காவுக்கு நன்றிகள் பல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross