நகராட்சியில் இருந்து எந்த நன்மையும் பெறாத ஏமாளி மக்கள் நாம்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[06 January 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 38763
மதுரை மாநகராட்சியில் தி மு க, அ தி மு க உறுப்பினரிடையே மோதல்,சென்னையில் தி மு க,அ தி மு க ,கோவை திருச்சி,வேலூர் இன்னும் பல ஊர்களின் நகராட்சி,மாநகராட்சி போன்றவற்றில் தி மு க, அ தி மு க அல்லது தே மு தி க மற்றும் பல இரு கட்சிகளிடையே எதிரிகளாய் மோதிக்கொண்டிருக் கிறார்கள் என்ற செய்திகளைத்தான் படித்துக்கொண்டிருக் கிறோம்!
ஆனால் ஆஹா.....நம்மூரில் ஒரே கட்சியைச்சேர்ந்த இரத்தத்தின் இரத்தங்கள், இதய தெய்வம்,புரசித்தலைவி, புண்ணியத்தாய், புடம்போட்ட தங்கம் என்று புகழாரம் சூட்டி மகிழும் அந்த கட்சியின் தலைவியின் கீழ் தங்களை இணைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நகராட்சி தலைவி முதல் அனைத்து உறுப்பினர்கள்வரை ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு புரளாத குறையாக,முட்டிமோதிக்கொள்ளும் காட்சிகள்
நம் நகராட்சியின் கண் கொள்ளாக்காட்சிகள் ஆகும்!
நீ இந்த திட்டத்தை கொண்டுவருகிறாயா?அதை எப்படி தடுக்கிறேம் பார் என்று ஒரு கோஷ்டியும்,அப்படியென்றால் நீங்கள் சொல்லும் எந்த திட்டமும் இமியளவும் நான் இங்கு உயிரோடு இருக்கும் வரை நிறைவேறாது என்று சபதம் ஏற்கும் இன்னொரு கோஷ்டியும் களத்தில் வார்த்தைகளால் வீரவசனங்கள்,சபதங்கள்,சந்தோஷ கேலி கிண்டல்கள் என்று களைகட்டி நாறுகிறது நம் நகராட்சி.ஆக,எந்தவித பயனும், உதவியும் நாம் பெறாமல் நம் வாயில் மண்ணை மாறி மாறி குத்துவதில்தான் என்ன குதூகலம் இருகோஷ்டிகளுக்கும்!
கண்ணியமிகு காயல் நெஞ்சங்களே,நாம் எத்தனை நாளைக்குதான் பொறுத்திருப்பது,பொறுமையின் எல்லைக்கே சென்று விட்டோம் விடை வெறுமை, வெறுமை,வெறுமைதான் . தனிப்பட்ட வல்லமை வாய்ந்த வில் வித்தகர்களின் விபரீதங்களின் விளைவால் வீசப்படும் அம்புகளால் அவதியுறும் அப்பாவி மக்கள்தான் நாம்!
பொருத்தது போதும் பொங்கிஎழு இளையசமுதாயமே,
இனிய நடுநிலை நெஞ்சங்களே,நேர்மையானஆன்றோர்களே சான்றோர்களே இந்த நகராட்சியை அடியோடு தலை முதல் அடிவரை அப்படியே கூட்டிப்பெருக்கி துடைத்தெறிய வேண்டும். அப்பொழுதுதான் நம்மூருக்கு விமோசனம் பிறக்கும்.வேறு எந்த வழியும் இதற்க்கு விடிவே அல்ல. இந்நிலை வளருமேயானால் வளர வளர வேதனைகளும், வீண் பகைகளும், வக்கரங்களும், ஊரின் வல்லமையின் ஆதிக்கங்களும்தான் கோலோட்சி புரியும்.அது நம்முடைய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதோடு, மிகப்பெரிய பகை உணர்வு புற்றுநோயாக பரவி ஊரையே அழித்துவிடும்!
எழுந்திரு காயலா,இத் தருணத்திலிருந்து விவேகத்துடனும், வேகத்துடனும் செயல்பட்டால்தான் ஒரு நிம்மதி
மூச்சுக்காற்று சிறுக சிறுக வெளிவந்து நம்மூருக்கு ஒரு
விடிவெள்ளியைப் பார்க்க முடியும்.வேதனையின் விரக்த்தியில் இருந்து கொண்டு இதை எழுதி உங்களை அழைக்கிறேன், கண்ணியமிகு காயலின் கற்றறிந்த,அறிஞர்களே, அனைத்து துறைகளிலும் அனுபவம் வாய்ந்த அன்புள்ளங்களே, அயல்நாட்டிலில் வாழும் அறிவுக்கூர்வாள் அருமை சகோதர்களே.ஆழசிந்தியுங்கள் அணுவளவும் ஆறப்போடக்கூடாத ஒரு முடிவுக்கு வாருங்கள்.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross