முடிவும் உண்டு,விடிவும் உண்டு எங்கள் விரல்களிலே... posted byM.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[11 April 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3879
இன்னும் ரெண்டு தெருவுக்குப் போகச் சொல்லுங்க அங்கே போர்வை எங்கே? செல் ஃபோன் எங்கே? லேப்டாப் எங்கே? இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் கேட்பாங்க...! அரசியலா நடத்துறங்க? அயோக்கியத்தனமே தவிர வேறேதுமில்லை! இதில் அனைத்துக் கட்சிகளும் அடங்கும்.
“காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கள்வர்க்கூட்டமடா -இது
நாட்டை ஆள வேடம் போட்டு நசுக்கும் கூட்டமடா,
நம்மை பொசுக்கும் கூட்டமடா!
அரசியலுக்கு அடித்தளமென்றால் லஞ்சம் அதுதானே,
அந்த லஞ்சம் நம்மை ஆள்வதாலே பஞ்சம் காண்போமே,
கொடிய பஞ்சம் காண்போமே!
இலவசமென்றதும் இளித்து நிற்கும் ஈனத்தனத்தாலே -உன்
இரத்தம் உறைந்து உழைப்பை இழந்து வீழ்வாய் மண்மேலே,
மக்கள் ஓட்டை விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகளே!
அதனால் ஆட்சியமைத்து அரியனை ஏறி அடித்த கொள்ளைகளால் நீங்கள் அகப்படப் போகும் நாள் வெகுதூரம் என எண்ணிவிடாதீகள்!
முடிவும் உண்டு, விடிவும் உண்டு எங்கள் விரல்களிலே,
அதை அழுத்தும் போதே தெரிந்து போகும் அழிபவர் யாரென்று”
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross