மறைக்கப்பட்ட உண்மைகள்! posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[09 January 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38832
இந்த அமைப்பினர், சில உண்மைகளை மக்களிடம் மறைக்கின்றனர். இரு வேறு திட்டங்கள் (குப்பை கொட்டுவதற்கு & பயோ கேஸ் திட்டம்) இருக்கும் போது, பயோ கேஸ் திட்டத்தை மட்டும் தூக்கி பிடிக்கும் காரமென்ன?
இவர்களின் நோட்டிஸில் குறிப்பிட்ட படி, பயோ கேஸ் plant வந்தால் விலை அதிகரிக்கும். ஆனால், குப்பை தொட்டும் (dumping yard) வந்தால் விலை ஏறாது. இந்த அமைப்பினர் & தலைவி கொண்டு வர நினைக்கும் plant இடத்தின் அருகில், தலைவி / அவர் குடும்பத்தார் அல்லது இந்த அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு நிலம் இருக்கிறதா? அதன் விலையை அதிகரிக்கும் முயற்சியா? அவர்கள் குப்பை கொட்டும் இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த plant-க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் இப்போது புரிகிறதா?
பயோ கேஸ் பற்றி விலாவாரியாக நோட்டிஸ் விடும் இவர்கள், ஊரில் சேரும் குப்பைகள், தற்போது எங்கு கொட்டப்படுகிறது? என்று விளக்கி நோட்டிஸ் விடுவார்களா?
"உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்".(C&P) (சாளை பஷீர்)
பாராட்டுக்கள். வரவேற்க வேண்டிய கருத்து. ஆனால், சர்வே எண் 278-ஐ போய் பார்பதற்கு முன், தற்போது கொட்டப்படும் இடத்தையும் பொதுமக்கள் பார்பதற்கு MEGA அமைப்பினர் ஊர்தி வசதி செய்தால் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.
இந்த நோட்டிசின் முரண்பாடுகள். 2009-ல் இந்த இடத்தை வாவு ஹாஜி SAR அவர்கள் விற்க (இலவசமாக கொடுக்க அல்ல) முடிவு செய்தார். “ஆனால், அந்த இடம் அரசின் CRZ விதிமுறைகளை மீறி அமைந்திருந்ததால், அங்கு குப்பை கொட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்தது”. (C&P)
“வருடம் 2014, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்த அதே இடத்தின் மற்றொரு பகுதியைத்தான் அதே தனவந்தர் நகராட்சிக்கு தற்போதும் தந்துள்ளார்”. (C&P)
முன்பு கொடுக்க முன்வந்த இடம், CRZ பகுதி. ஆனால் இப்போது கொடுத்தது, CRZ பகுதிக்கு வெளியே. மேலும் முன்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்தது, அந்த இடம், CRZ பகுதியில் வருகிறது என்ற காரத்தினாலேயே தவிர, BUFFER ZONE அமைக்கவில்லை என்ற காரத்தினால் அல்ல.
இந்த இடத்தை ஏற்கனவே நமது மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தார். இந்த இணையத்தில் வந்த செய்தியை மீண்டும் தருகிறேன்.
"காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில், நில அளவை எண் 278இல் உள்ள தனிநபர் பட்டா நிலம் திடக்கழிவு மேலாண்மைக்காக இனாமாகப் பெற வாய்ப்புள்ளதாக நகராட்சி தலைவியால் கூறப்பட்டதால் தலம் பார்வையிடப்பட்டது. >> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
>> மேற்படி நிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது.
>> மேற்படி நிலத்தில் திட்ட செயல்பாட்டிற்காக 25.00 அளவுள்ள நிலப்பரப்பு குறைந்த அளவு விலை நிர்ணயத்தொகை அடிப்படையில் வழங்க சம்மதிப்பதாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.
>> மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் கருத்தை மக்களுக்கு விளக்குவார்களா? தற்போது, பயோ கேஸ் திட்டத்துக்காக தேவையான 25 சென்ட் அளவுக்கு அதிகமாகவே 50 சென்ட் தானமாக கொடுத்துள்ளார்.
அந்த இடத்தில் பயோ கேஸ் plant அமைக்க, திருநெல்வேலி மண்டல நிர்வாக செயற்பொறியாளர் அனுமதி அளித்து, வேலை தொடங்குவதற்கு ‘பணி ஆணை’ (work order) கொடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாக இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross