காயலின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[12 January 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 38873
ஹம்திலில்லிலாஹ்! விரைவாக நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கும்,ஊரின் கண்ணிய கலாசாரத்தை காக்கும் முகமாக விரைந்து நடவக்கை எடுத்த நகராட்சி தலைவி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!
நம்மூரின்னுள்ளோ, நம் நகராட்சியினுள்ளோ பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளலாம், சில கருத்து வேறுபாடு வாதங்கள் கூட நடைபெறுகிறது, இதெல்லாம் நமக்குள் நடைபெறுகின்ற நன்மை தீமைகளின் வாத, பிரதிவாதங்களே!
இதுபோன்ற சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக்கி சில சந்தர்ப்ப சூழ்ச்சி வலை பின்னும் விஷமிகள், நம் புண்ணிய காயலின் போற்றுதலுக்குறிய கலாசாரத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் நமதூரில் மது குடிக்கும் பழக்கத்தை கொண்டுவந்து அதை விற்கும் முயற்சிலும் இறங்கி இருக்கிறார்கள் அதோடு மட்டுமல்ல,.
திரைப்படங்களின் தரம் தாழ்ந்த பாடலுக்குறிய ஆடல் பாடல் நிகழ்சிகளை நமதூர் மேடையிலேயே அரங்க்கேற்று வதையும், ஒருபடி மேலே சொல்லவந்தால் (சொல்லவே வெட்கப்படுகிறேன்) சில பள்ளி மேலாளர்களின் மூளையை சலவை செய்து அந்த பள்ளிக்கூட ஆண்டுவிழ போன்ற நிகழ்ச்சிலும் கூட இந்த ஆடல் பாடல் என்ற அசிங்கமான கூத்து நடைபெற வைத்து விடுகிறார்கள் இச்சூழ்ச்சிகாரர்கள்!
புனித இஸ்லாம் மார்க்கம் கமழும் நம் காயலூரில் இதுபோன்ற செயல்களுக்கு கிஞ்சிற்றும் வாய்ப்பளிக்கா வண்ணமும், நம் பாரம்பரிய வாழ்க்கை மேம்பாட்டுக்குறிய வழிகாட்டுதலுக்கு சிறிதளவு புழுதிகூட பரவாவண்ணமும் நம் புனித மார்க்கத்தையும், நம் புண்ணிய காயலையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு காயல் குடிமகனின் கடமையாகும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross