எறும்புக் கூட்டமாய் இருப்பதே மேல்!!! posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[11 April 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3889
வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!
என் விரல் நுனியில்
மையிட;
விலை நடக்கும்;
இடம் கொடுத்தால்
பை நிறையும்!
குரல் கொடுக்க
விரல் விட்டு
எண்ணும் கூட்டம்;
அதுவும் விரல் வேண்டும்
ஓட்டுக்கு என்பதால்!
இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!
குழு குழுவாய் தனித்திருந்து
புழுவாய் அழிவதைவிட;
அடிக்க வரும்
எதிரியை கடித்துவிட்டு சாகும்
எறும்புக் கூட்டமாய் இருப்பதே மேல்!!!
வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross