இறுதி காலத்தை வீடு பள்ளிவாசல் எனக் கழித்தார்கள்...!!! posted bySK Shameemul Islam (Chennai)[13 January 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 38895
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமா லெப்பை தம்பி அவர்களின் மறைவு அறிந்து மிகவும் துயருறுகிறேன்.
என் இளமைக் காலம் முதல் இப்போது வரை காணும் போதெல்லாம் சில நிமிடங்கள் நின்று என்னிடம் சுகம் விசாரித்து வீட்டில் உள்ளவர் அனைவரின் நலமும் விசாரித்து செல்வார்கள்.
இறுதி காலத்தை வீடு பள்ளிவாசல் எனக் கழித்தார்கள்.
சுபுஹு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றிவிட்டு தொடர்ந்து வீட்டின் முன்பு நின்று சுத்தம் செய்வதும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதும் என எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்து வந்தவர்கள்.
சிலரைப் பற்றிய நினைவுகளை எழுத்துக்களால் பதியலாம். மற்றும் சிலர் பற்றிய நினைவுகளோ நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடிக்கும்.
அன்பு மாமா அவர்கள் இரண்டாம் வகையினர்.
முகத்தாலும் சிரிப்பாலும் பேச்சாலும் அன்பை மட்டுமே கொட்டியவர்கள்.
சமீபத்தில் ஊர்வந்த சமயம் அன்னாரின் அன்பு மகனார் சித்தீக் காகா அவர்கள் வாப்பா சற்று சுகக்குரைவாக உள்ளார்கள் எனக் கூறியபோது பார்க்க வேண்டுமென ஆவலுற்றேன். ஆனால் சிறிய விடுமுறை என்பதால் முடியாமல் போனது. வருந்துகிறேன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து கப்ரின் வாழ்வை சோபனமாக்கி உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அன்னாரை நிலைப்படுத்துவானாக.
மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னவர் குடும்பத்தவர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலாவை வழங்குவானாக.
அனைவருக்கும் எங்களின் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross