செய்தி: இலங்கை, சிங்கையில் ஜன்சேவா அறிமுகக் கூட்டங்கள்! காயல்பட்டினத்திலிருந்து பிரதிநிதிகள் உரை!! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் posted bymackie noohuthambi (colombo)[16 January 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 38918
காயல்பட்டினத்தில் எந்த ஒரு நல்ல விஷயம் ஆரம்பித்தாலும் அதன் ஆரம்பம் கொழும்பை நோக்கியே இருக்கும். நமது முன்னோர்களும் இதையே செய்தார்கள். வெற்றி பெற்றார்கள்.
ஆதம் அலைஹிஸ் சலாம் இலங்கையில் இறங்கியதாக ஒரு செய்தி. ஹவ்வா அலைஹிஸ் சலாம் ஜித்தாவில் இறங்கியதாக ஒரு செய்தி. இலங்கையில் ஆதம் அலைஹிஸ் சலாம் இறங்கியதால் அவர்கள் பேசிய மொழி தமிழ். ஹவ்வா அலைஹிஸ் சலாம் பேசிய மொழி அரபி. எனவே நமக்கு தந்தை மொழி தமிழ். தந்தை நாடு இலங்கை என்று ஒரு அறிஞர் சொல்லிக் காட்டுவார்.
இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்தால் நமக்கு தொப்புள் கொடி உறவு இலங்கையில் தான் நிறைய உண்டு. அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை தாலி கொடி உறவாகவும் மேன்மைப் படுத்த வேண்டும் என்று எண்ணி நம் முன்னோர்கள் இலங்கையில் இலங்கை முஸ்லிம் பெண்களை மணம் முடித்து சந்ததிகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன் விளைவுதான் தமிழக முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையே இந்த எதிர்பார்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல, அங்கு வாழும் எல்லோரும் உபசரிப்பையும் புன்சிரிப்பையும் தங்கள் வாழ்வியலாக கொண்டவர்கள். அவர்கள் உறவுக்கு கை கொடுப்பார்கள் - நல்ல விஷயங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள். அதே சமயம் உரிமைக்கு குரல் கொடுப்பார்கள். அநியாயங்கள் அட்டூழியங்கள் மிகைக்கும்போது அல்லாஹ்விடம் கை ஏந்துவார்கள்.அமைதியான முறையில் போராடுவார்கள். சமயம் வரும்போது ஆட்சி மாற்றத்துக்கும் வழி வகுப்பார்கள். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் அற்புதமாக காய் நகர்த்தி, அரசியல் சதுரங்க நாடகத்தில் ஒரு கார்ல்சன் போல் வெற்றி வாகை சூடினார்கள்..
இன்ஷா அல்லாஹ் காயல்பட்டினத்தில் தோன்றியுள்ள வட்டி இல்லா கடன் வங்கிக்கு இவர்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் நிறையவே இருக்கும் என்று எதிர்பார்ப்போம். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross