Re:... posted byM.I.Moosa Naina (Chennai)[17 January 2015] IP: 124.*.*.* India | Comment Reference Number: 38946
நம் நகர்மன்ற தலைவியும், அதிமுகவின் முண்ணனி உறுப்பினராகவும் உள்ள சகோதரி ஆபிதா சேக் அவர்களின் மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட சீரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அத்தனை வேண்டுகோளும் கூடிய சீக்கிரம் நிறைவேற்ற, நமது மாவட்ட அமைச்சரிடம் தலைவிக்கு உள்ள அபிமான நெருக்கத்தை பயன்படுத்தி அவ்வப்போது followup செய்ய வேண்டியது மிக முக்கியம்.
சகோதரர்.முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள், அதிமுகவை சேர்ந்தவர்கள் எது செய்தாலும் அதை கிண்டல் அடிப்படையில் தனது கருத்துக்களை பதிவு செய்கிறார். அப்படிபட்டவருக்கு பதில் கூறி எங்களது பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
அவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்குமானால், திமுக ஆட்சி காலம், அதிமுக ஆட்சி காலம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து நமதூருக்கு, நமது சமுதாயத்துக்கு கிடைத்த சேவைகள், நன்மைகள் என்ன... என்ன..., அதிமுகவை சேர்ந்த முண்ணனி உறுப்பினர்கள் நமதூர் மக்களுக்கு செய்துள்ள சேவைகள் நன்மைகள் என்ன... என்ன ... என்பதை சீர்தூக்கி பார்த்து கருத்துக்களை எழுதவும். எங்களால் மார்தட்டி சொல்ல முடியும்... திமுகவைவிட அதிமுகவினால் தான் நன்மைகள் ஏராளம் நமதூருக்கு கிடைத்துள்ளது.
ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதும் சகோதரருக்கு ஒரு கேள்வி, நமதூரின் மிக முக்கிய பிரச்சனை, தடம் மாறி போகும் பேருந்து பிரச்சனை. அந்த பிரச்சனையை ஆளும் கட்சியாக இருந்தும் கூட அதிமுகவின் முண்ணனியினர் பல தடவை கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நமது நாட்டை பொருத்தவரை போராட்டம் என்று ஒன்று செய்தால் தான் அதற்கு value அதிகம். திமுகவினர் ஏன் அதை கையில் எடுத்து ( அரசியல் ஆதாயம் தேடும் முகமாகவும் கூட ) போராட்டத்தை நடத்தவில்லை?.
தனது மக்களின் பதவி சண்டையை சரி செய்ய முடியாமல் தலைவர் திண்டாடும் போது, நாட்டு மக்களிம் பிரச்சனையாவது மண்ணாங்கட்டியாவது - யாரோ சொல்வது என் காதில் விழுகிறது.
தற்போது தலைவி அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற தமிழக முதல்வரின், மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கடைக்கண் பார்வையோ தேவையில்லை. அமைச்சர்கள் மட்டத்தில் செய்து முடிக்க கூடிய பிரச்சனைகள் தான். எனவே அப்பிரச்சனைகள் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கட்சியை பொருத்தவரை தலைவி அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாகவும், விவேகம் உள்ளவையாகவும் உள்ளது.
தலைவி அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்: நமதூர் ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் மின்சார விளக்குகள் எரிவதில்லை. நானும் பல தடவை கண்டுள்ளேன். அதே சமயத்தில் குறிப்பிட்ட செந்தூர் ரயில், நிலையத்துக்கு மிக அருகில் வரும் சமயத்தில் அனைத்து விளக்குகளும் எரிய விடுகிறார்கள். நான் விசாரித்த வரை இது தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இதனால் வயதான பயணிகள், பெண்கள் உட்பட அனைவரும் படும் அவஸ்த்தை ஏராளம். எனவே இந்த விசயத்தையும் கையில் எடுத்து நமது பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு ஆவன செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.
இந்த விசயத்தையும் திமுக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் கையில் எடுத்து போராட்டம் நடத்தி அரசியல் ஆதாயம் தேடலாம் என்பதே என் விருப்பம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross