Re:...MGR A CHARISMATIC FIGURE posted bymackie noohuthambi (colombo)[18 January 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 38970
சில பெயர்களுக்கு சில வசீகர சக்தி உண்டென்று தமிழில் சொல்வார்கள். அரபியில் கூட ஒருவர் பேசினால் அதில் சூனியம் இருக்கும் என்பார்கள். உங்களை அவரது பேச்சு கட்டிப் போட்டு விடும்.பேரறிஞர் அண்ணா அவர்களின் மேடைப் பேச்சுக்கள் தான் 1967 இல் திமுகவை ஆட்சியில் அமர்த்தியது.
அப்போது MGR அவர்களை பற்றி அண்ணா சொல்லும்போது தம்பி உன்முகத்தை காட்டினால் 3 லட்சம் ஓட்டுக்கள் கிடைக்கும் என்றார்.
கனி என் மடியில் விழுந்தது அதை என் இதயத்தில் வைத்திருக்கிறேன் என்றார். நாகூர் ஹனீபா கூட அவரது பாடலில் காய்ந்து சிவந்தது சூரிய காந்தி. தணலில் தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் ஆய்ந்து சிவந்தது அறிஞர்தம் நெஞ்சம் தினம் ஈந்து சிவந்தன MGR இரு கரமே என்று புகழ்ந்து பாடுவார்.
திமுகவை அழிக்க ஒரு திமுக காரனால் தான் முடியும் மற்றெவரும் அந்த இயக்கத்தை அழிக்க முடியாது என்று அண்ணா சொன்னது போல் நடந்தது.
சில நேரங்களில் எவ்வளவு பெரிய சாணக்கியனும் தன் குடும்ப பாசத்தால் தோற்றுப் போவது போல் கலைஞர் MGR அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். நான் சட்டமன்றத்துக்கு முதல் அமைச்சராகதான் நுழைவேன் என்று சபதம் போட்டு சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய MGR சாகும் வரை முதல் அமைச்சராகவே இருந்தார். அதைத்தான் ஆங்கிலத்திலே CHARISMA என்பார்கள். அந்த பிம்பம் இன்னும் தொடர்கிறது.
ஆங்கிலத்திலே MYTH என்பார்கள். அது ஒரு பொய்யான தோற்றம். ஆனாலும் அந்த தோற்றத்துக்குள் இருந்த ஆதர்சன சக்தியை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
புரட்சி தலைவர் கட்சியை இப்போது ஜெயலலிதா நடத்துவதால் புரட்சி தலைவி என்று அவரை அழைக்கிறார்களே தவிர, எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் அவரது ஆட்சிக் காலங்கள் அமைந்திருந்தது.
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல் MGR ருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. ஒரு முகத்தைத்தான் இங்கு எழுதியுள்ளேன். அடுத்த முகம் சற்று கசப்பானது. அவரது இந்த பிறந்த நாளில் அவரது நல்லதை மட்டுமே பேசுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross