இந்த முறை நேர்மையா நடந்துகொண்டுள்ள தேர்தல் ஆணையம்..! posted byM.A.C. AHAMED THAHIR (NEW DELHI)[12 April 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 3907
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்..!
சபாஷ் ! இதை தான் எதிர்பார்த்தோம்!
நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து அரசியல் கட்சிகள் ஏற்கனவே அரண்டு போய், "இப்பவே கண்ணக் கட்டுதே" என புலம்பிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த பயம் தெளியவே இன்னும் பல மாதம் ஆகும். அதற்குள் நம் தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகளிடம்..... "அட, இதுக்கே இப்படியா... இன்னும் எவ்வளவு இருக்கு....", என்பது போல மறுபடியும் ஒன்றை சொல்லி இருக்கு.
இத்தனை வருஷம் இந்த அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அவர்கள்தான் பெரிய ஆள், அவர்களை யாரும் எதுவும் கேட்க முடியாதுங்கற மாதிரி என்ன ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். நம் இந்திய வரலாற்றிலேயே இப்ப தான் நம் தேர்தல் கமிஷன் தான் யார், தன் அதிகாரம் என்ன என்பதை முழுமையாக காட்டி இந்த அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறது.
ஹும்..... ஓட்டு எண்ணி முடிப்பதற்குள் இன்னும் என்ன என்னவெல்லாம் தேர்தல் கமிஷனிடம் இருந்து வருமோ. வந்தால் நமக்கு சந்தோஷம் தான். நம் மக்கள் நிச்சயம் அதை முழு மனதோடு வரவேற்ப்பார்கள். இப்பவே மக்கள் எல்லாரும் தேர்தல் கமிஷனை மனதாரப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று ..... இந்த தேர்தலில் .......... நம் தேர்தல் கமிஷன் தான் ஹீரோ.... அதன் தலைவர்கள் திரு. குரோஷியும், திரு. பிரவீன் குமாரும் தான் ஹீரோ. இப்படிப் பட்ட மிக நேர்மையான அதிகாரிகள் இருப்பதால் தான் இன்னும் ஜனநாயகம் இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு மேலும் பல புகழ்களையும், நீண்ட ஆயுளையும், ஆரோக்யத்தையும் அருளட்டும்.
இவர்கள் இருவரும் நம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள். இவர்களுக்கு என் ராயல் சல்யூட்கள் ! வெல்டன்...
என்றும் அன்புடன்...
M.A.C.அஹ்மது தாஹிர்,
புதுடெல்லி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross