தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) வினியோகம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட ஆட்சியரகம் மூலம் வாக்காளர் சீட்டுகள் வினியோகிக்கப்பட்டது. இதில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 97 சதவிகிதம் வாக்காளர் சீட்டுகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 93 சதவிகிதமும்,
விளாத்திகுளம் தொகுதியில் 92 சதவிகிதமும்,
கோவில்பட்டி தொகுதியில் 80 சதவிகிதமும்,
தூத்துக்குடி தொகுதியில் 72 சதவிகிதமும் வாக்காளர் சீட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 87 சதவிகித வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. |