ஏப்ரல் 13 அன்று தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர் அட்டையில் பிழைகள் கொண்டவர்கள் எவ்வாறு உபரி ஆவணங்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றில் இன்று விவரித்துள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
1. சில வாக்காள சீட்டுக்கள் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளில் பொருந்தாத புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள சில நேர்வுகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
2. இது தொடர்பாக பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. வாக்காளர் சீட்டுக்களில் புகைப்படம் இடம்பெறாமல் இருத்தல், வாக்காளர் சீட்டுக்கள் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளில் விவரங்களில் தவறு இருத்தல் அல்லது பொருந்தாத புகைப்படம் இடம்பெற்றிருத்தல் ஆகிய நேர்வுகளிலும் கூட, இந்திய தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காண்பதற்க்கென அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். எனினும் மாற்று அடையாள ஆவணத்துடன், தமக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை / வாக்காளர் சீட்டு ஆகியவற்றை வாக்காளர் வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குனர்,
செய்தி, மக்கள் தொடர்பு துறை,
சென்னை - 9. |