தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி (நாளை) நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் குறைகள் குறித்த தகவல்களை பெற வாக்காளர்கள் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்கு செலுத்தும் சீட்டு சம்பந்தமான விவரங்கள் அறிய
விளாத்திகுளம் தொகுதியிலுள்ளோர் 94875 35924 என்ற எண்ணிலும்,
தூத்துக்குடி தொகுதியிலுள்ளோர் 94875 34925 என்ற எண்ணிலும்,
திருச்செந்தூர் தொகுதியிலுள்ளோர் 94875 35926 என்ற எண்ணிலும்,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலுள்ளோர் 94875 53927 என்ற எண்ணிலும்,
ஓட்டப்பிடாரம் தொகுதியிலுள்ளோர் 94875 16928 என்ற எண்ணிலும்,
கோவில்பட்டி தொகுதியிலுள்ளோர் 94875 45929 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
மேலும், வாக்கு செலுத்தும் இடத்தில் வாக்காளர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் அப்பகுதி மண்டல அலுவலரைத் தொடர்பு கொள்ள வேண்டும். தகவல் பெறப்பட்டவுடன் பாரா மெடிக்கல் குழுவினர் வந்து முதலுதவி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு சம்பந்தமான முறைகேடுகள் பற்றி புகார் தெரிவிக்க,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரை 75987 05466 என்ற எண்ணிலும்,
மாவட்ட வருவாய் அலுவலரை 75987 05467 என்ற எண்ணிலும்,
தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதிகளுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்களை 75987 00224 என்ற எண்ணிலும்,
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்களை 75987 00225 என்ற எண்ணிலும்,
ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்களை 75987 00226 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையான வாக்குப் பதிவை 100 சதவீதம் செய்து உறுதுணை புரிய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |