காயல்பட்டினத்தின் வடபுறம் உள்ள DCW தொழிற்ச்சாலை தான் தயாரிக்கும் சில பொருட்களின் உற்பத்தி அளவை அதிகரிக்க, மேலும் புதிதாக CPVC உற்பத்தி செய்ய, மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. இதற்க்கான விண்ணப்பத்தினை அது கடந்த அக்டோபர் 27, 2010 இல் தாக்கல் செய்துள்ளது. அது குறித்த விசாரணை ஜனவரி 20, 2011 அன்று புது டில்லியில் நடைபெற்றது.
அவ்விசாரணையின் முடிவில் Experts Appraisal Committee சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
DCW நிறுவனம் புது திட்டங்கள் குறித்த 50க்கும் மேற்பட்ட தகவல்கள் (Terms of Reference) அடங்கிய சுற்றுப்புற சூழல் தாக்கம் பற்றிய கணிப்பு (Environmental Impact Assessment) மற்றும் மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்கதொகுப்பு (Environmental Management Plan) ஆகியவற்றை தாக்கல் செய்ய DCW நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தற்போது DCW அமல்படுத்தி உள்ள சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்துக்கொள்ள DCW தொழிற்சாலையின் சாஹுபுற மையத்திற்கு தனது துணை குழுவினை (Sub Committee) அனுப்ப முடிவெடுத்துள்ளது.
புது திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து அறியும் நிகழ்ச்சி (Public hearing) நடத்தாமல் இருக்க DCW அனுமதி கேட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டே இத்தொழிற்ச்சாலை குறித்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக DCW தெரிவித்திருந்தது. இது குறித்த முடிவு துணைக்குழுவின் விஜயத்திற்கு பிறகு எடுக்கப்படும் என Experts Appraisal Committee அறிவித்துள்ளது.
ஜனவரி 20, 2011 கூட்ட முடிவுகளை முழுமையாக காண இங்கு அழுத்தவும்.
2006 ஆம் ஆண்டு நடந்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி (Public hearing) காஸ்டிக் சோடா உற்பத்தியை பெறுக்கும் திட்டத்திற்கும், புது முறையில் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்வதற்காகவும், 50 MW கொள்ளவில் மின்சார உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்திற்காகவும் நடத்தப்பட்டது.
DCW சமர்ப்பித்துள்ள தற்போதைய திட்டப்படி Trichloroethylene உற்பத்தி அளவு 7,200 MTPA இல் இருந்து 15,480 MTPA ஆக உயர்த்தப்படும். மேலும் PVC உற்பத்தி 90,000 MTPA இல் இருந்து 150,000 MTPA ஆக உயர்த்தப்படும்.
DCW நிறுவனம் டிசம்பர் மாதம் பிரெஞ்சு நிறுவனம் Arkema வுடன் CPVC தயாரிக்க ஒப்பந்தம் செய்தது நினைவிருக்கலாம். தனது தற்போதைய விண்ணப்பத்தில் CPVC உற்பத்தி 14,400 MTPA இருக்கும் என DCW தெரிவித்துள்ளது.
தற்போது நிலக்கரிக்கொண்டு சாஹுபுர வளாகத்தில் 58.27MW அளவு மின்சாரம் DCW உற்பத்தி செய்துவருகிறது. அதனை 108.27 MW ஆக உயர்த்த DCW தற்போது விண்ணப்பித்துள்ளது.
தகவல்:
www.dcwmonitor.com
|