|  வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் ஹாங்காங் - கவ்லூன் நகரிலுள்ள க்வன் சங் விளையாட்டரங்கில், பாட்மிண்டன் சுற்றுப்போட்டி 05.04.2011 அன்று நடத்தப்பட்டது. 
 காயல்பட்டினத்தைச் சார்ந்த சில வீரர்களும் இதர இந்திய வீரர்களுடன் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டியில் அனுப் - ராகேஷ் இணை முதலிடத்தையும், ஜெரோம் - ராம் இணை வெற்றிக்கு இரண்டாமிடத்தையும் பெற்றது.
 
 வெற்றி பெற்ற வீரர்களுக்கு வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
 
 
  
 
  
 
  
 தகவல்:
 அலீ ஃபைஸல்,
 நிறுவனர்,
 வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப்.
 |