தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி யுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் 76.1 சதவீதமும், தூத்துக்குடி தொகுதியில் 73.7 சதவீதமும், திருச்செந்தூர் தொகுதியில் 77.5 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 75.1 சதவீதமும், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 75.6 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 72.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 1 லட்சத்து 74 ஆயிரத்து 991 வாக்களர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 86 பேர் வாக்களித்தனர். தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 12 ஆயிரத்து 469 வாக்களர்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 497 பேர் வாக்களித்தனர். திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 89 ஆயிரத்து 951 பேரில் 1லட்சத்து 47ஆயிரத்து 296 பேர் வாக்களித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 75 ஆயிரத்து 659 வாக்களர்களில் 1 ட்சத்து 31 ஆயிரத்து 863 பேர் வாக்களித்துள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 66 ஆயிரத்து 877 வாக்காளர்களில் 1லட்சத்து 26 ஆயிரத்து 213 பேர் வாக்களித்துள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரத்து 433 வாக்களர்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 402 பேர் வாக்களித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 லட்சத்து 380 பேரில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 357 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆண் வாக்களர்கள் 5 லட்சத்து 45 ஆயிரத்து 825 பேரில் 4 லட்சத்து 3ஆயிரத்து 532 பேர் வாக்களித்துள்ளனர். பெண் வாக்களர்களில் 5லட்சத்து 54 ஆயிரத்து 555 பேரில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 825 பேர் வாக்களித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண் வாக்களர்கள் 73.9 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 76.1 சதவீதமும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பெண் வாக்களர்களே அதிகம் வாக்களித்துள்ளது தெரியவருகிறது. யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என 879 பேர் 49 ஓ-வை பயன்படுத்தியுள்ளனர்.
இதில் விளாத்திகுளம் தொகுதியில் 72 பேரும், தூத்துக்குடி தொகுதியில் 174 பேரும், திருச்செந்தூர் தொகுதியில் 131 பேரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 150 பேரும், ஓட்டப்பிடாரம் (தனி)தொகுதியில் 239 பேரும், கோவில்பட்டி தொகுதியில் 113 பேரும் 49 ஓ-வை பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 59 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் கூடுதலாக 16சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் அதிகமான பேர் வாக்களித்துள்ளனர்.
மக்கள் திருப்தியுடன் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதுமின்றி வாக்களித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
தகவல்:
www.tutyonline.net
|