சவுதி அரபியாவில் உள்ள ஜித்தாஹ் நகரில் இருந்து செயல்படும் Islamic Development Bank - 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய உட்பட பல நாடுகளில், தொழில் கல்வி பயில விரும்பும் தகுதியான, அதே நேரத்தில் வசதி குறைவாக உள்ள, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான (2011-2012) விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 5, 2011 ஆகும். விண்ணப்பங்களை பெற www.metdelhi.org இணையதளம் அல்லது www.sit-india.org இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பங்கள் குறித்த சில விதிமுறைகள் வருமாறு:-
(1) கீழ்க்காணும் படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்:
Bachelor Degree Courses in Medicine (including Ayurvedic, Unani & Homeopathy) Dentistry, Pharmacy, Veterinary Science, Physiotherapy, Nursing, Lab Technician, Bio-Technology and Microbiology, Engineering (all branches), Agriculture, Fisheries, Forestry, Food Technology, Bachelor of Business Administration and Bachelor of Law
(2) English, Physics, Chemistry மற்றும் Biology/Mathematics பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்கள் குறைந்தது பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா பிரதேஷ், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் மாணவர்கள் 70 சதவீத மதிப்பெண்கள் குறைந்தது பெற்றிருக்க வேண்டும்
(3) வயது 24ஐ தாண்டி இருக்கக்கூடாது
(4) பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கே உதவி தொகை வழங்கப்படும்
(5) கல்லூரியில் இடம் தகுதி அடிப்படையில் (Merit) பெறப்பட்டிருக்கவேண்டும்
(6) வட்டியில்லா கடன் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்படும். கல்லூரி படிப்புக்குப்பின் தவணை முறையில் உதவி தொகை திருப்பி பெறப்படும். |